புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2021

இரவோடு இரவாக திரும்பி வந்த காணி ஆவணங்கள்

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரம் கொண்டு செல்லப்பட்டிருந்த காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆவணங்கள் நேற்று மாலை யாழ் மாவட்டச் செயலகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.
காணி ஆவணங்கள் நேற்று மாலை 5.30 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலகத்தை வந்தடைந்ததாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் யாழ்.மாவட்ட பொறுப்பதிகாரி விமலனும் உறுதிப்படுத்தினார்

கடந்த 08 ஆம் திகதி இரவு காணி ஆவணங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து இரகசியமாக அனுராதபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தன.

மின்சாரம் தடைப்பட்டிருந்த நேரம் மேற்கொள்ளப்பட்ட குறித்த நடவடிக்கை பெரும் சர்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குறித்த ஆவணங்களை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்படும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

ad

ad