புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2021

வெளிநாட்டுப் படைகள் இலங்கையில் கால்வைக்கும்-ஐ.நாவுக்கான முன்னாள் வதிவிடப் பிரதிநிதி தமரா குணநாயகம்

www.pungudutivuswiss.com
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் பிரித்தானிய தலைமையிலான இணை அனுசரணை நாடுகள் முன்வைத்துள்ள பிரேரணை நிறைவேற்றப்படுமாயின் சிறிலங்காவில் வெளிநாட்டு படைகள் தங்கு தடையின்றி பிரசன்னமாகலாம் என்று ஐ.நாவுக்கான முன்னாள் வதிவிடப் பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்தார்.

நிறைவேற்றப்படும் பிரேரணை தமிழ் மக்களின் விடயங்களுக்கு பொறுப்புக்கூறுவதற்கானது என்று விம்பப்படுத்தப்பட்டாலும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள், இந்தியாவுடன் இணைந்து சிறிலங்காவின் கேந்திரஸ்தானத்தினை தமக்குச் சார்பாகப் பயன்படுத்தி பூகோள ரீதியான சீன எதிர்ப்பினை முன்னெடுப்பதே இலக்காகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம், சிறிலங்கா அரசாங்கம் பிரேரணையை நிராகரிப்பதாக தொடர்ச்சியாக கூறிவருகின்றது. உண்மையில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அப்பிரேரணை பெயிரிட்டு அறிவிக்கப்பட்டதும் இலங்கையின் சார்பில் உறுப்புரிமை கொண்ட நாடொன்று வாக்கெடுப்பினைக் கோர வேண்டும்.

அவ்வாறு கோராது நிராகரிப்பதாக பூச்சாண்டி காண்பித்துக் கொண்டிருப்பதால் எவ்விதமான பயனுமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்

ad

ad