புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2021

www.pungudutivuswiss.com

உள்ளிருப்பு அனுமதிப்பத்திரம் - புதிய நடைமுறை விளக்கம்!! புதிய அததாட்சிப் பத்திரம்!!



மிகவும் தாமதமாக அரசாங்கம் வெளியிட்ட உள்ளிருப்பு அனுமதிப்பத்திரத்தை அரசாங்கமே, தவறுகள் உள்ளமையால் நீக்கி உள்ளது. தற்போது இலகுவாக்கப்பட்ட அத்தாட்சிப்: பத்திரம் ஊரடங்கிற்கு வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது புதிய இலகுவான நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

10 கிலோமீற்றர் சுற்றுவட்டாரத்திற்கு

பகலில் வசிப்பிடத்தில் இருந்து 10 கிலோமீற்றர் சுற்றுவட்டாரத்திற்குள் வெளியே செல்வதற்கு, அனுமதிப்பத்திரம் அவசியம் இல்லை. ஆனால் வசிப்பிட முகவரிக்கான அத்தாட்சியினை வைத்திருத்தல் வேண்டும். உதாரணமாக சரியான விலாசத்துடன் கூடிய அடையாள அட்டை போதுமானது.

வழமையான வசிப்பிடம் அல்லாது வேறு இடத்தில் உள்ளிருப்பில் இருந்தால்

வழமையான வசிப்பிடத்தில் இல்லாது, வேறு இடத்தில் உள்ளிருப்பில் இருந்து, வெளியே 10 கிலோமீற்றர் சுற்றுவட்டாரத்திற்குப் பகலில் செல்லும் போது, கட்டாயமாக முறையான அனுமதிப்பத்திரம் தேவை.

 

10 கிலோமீற்றர் தாண்டிச் செல்லும் போது

வசிப்பிடத்தில் இருந்து 10 கிலோமீற்றர் சுற்றுவட்டாரத்தைத் தாண்டிச் செல்லும் போது, கட்டாயமாகக் முக்கிய காரணம் குறிப்பிடப்பட்ட அத்தாட்சிப் பத்திரம் அவசியம். வேலைக்குச் செல்லுதல் (professionnelle), அல்லது குடும்ப அத்தியாவசியக் காரணம் (motif familial impérieux)போன்றவை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் வேலைக்குச் செல்வதானால் பணிபுரியும் நிறுவனத்தின் அத்தாட்சிப் பத்திரமும் வைத்திருத்தல் அவசியம். இரண்டு அனுமதிப்பத்திரங்களும் அவசியம்.

 

மாலை 19h00 இலிருந்து காலை 6h00 மணிவரை

தேசிய அளவில், மாலை 19h00 மணி முதல் ஊரடங்கு ஆரம்பிப்பதால், 19h00 மணியிலிருந்து, அதிகாலை 6h00 மணி வரை கட்டாய அனுமதிப்பத்திரம், வேலை மற்றும் மிகவும் அத்தியாவசியக் காரணம் குறிப்பிடப்பட்ட அனுமதிப்பத்திரம் அவசியம்.


இதற்கான புதிய அனுமதிப்பத்திரம் https://www.interieur.gouv.fr/Actualites/L-actu-du-Ministere/Attestations-de-deplacement இணையத்தள முகவரியில் வெளியடப்பட்டுள்ளது.வெளியிடப்பட்டுள்ளது

ad

ad