புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 நவ., 2021

கனடாவுக்கான எல்லையை நாளை திறக்கிறது அமெரிக்கா!

www.pungudutivuswiss.com


 கனடாவுக்கான அமெரிக்க எல்லை நாளை  திறக்கப்படவுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட இந்த எல்லை முதல் முறையாக நாளை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவுக்கான அமெரிக்க எல்லை நாளை திறக்கப்படவுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட இந்த எல்லை முதல் முறையாக நாளை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

கனடாவுக்குள் நுழைபவர்கள் கனடாவுக்குப் புறப்படுவதற்கு முன், 72 மணி நேரத்திற்குள் பிசிஆர் பரிசோதனை செய்து அதன் முடிவை எல்லையில் காட்ட வேண்டும்.

கனடாவுக்குள் நிலம் அல்லது கடல் வாயிலாக நுழைபவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தாலும் அவர்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

இருந்தாலும், எல்லை அதிகாரிகள், கொரோனா தொற்றியவர் அடுத்த 14 நாட்களுக்கு தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதற்கு என்ன திட்டம் வைத்துள்ளார் என்பதைக் கேட்பார்கள். அத்துடன், அவர்கள் அந்த நபரை பொது சுகாதார அலுவலர்களிடம் அனுப்பி வைக்கலாம்.

கனடாவுக்குள் நுழைபவர்களுக்கான கட்டாய ஹொட்டல் தனிமைப்படுத்தல் முடிவுக்கு வந்துவிட்டாலும், கொரோனா தொற்று உள்ள ஒரு கனேடியர் அல்லது தடுப்பூசி பெறாத கனேடியர் தனக்கு தனிமைப்படுத்திக்கொள்வதற்கு ஒரு இடம் இல்லாத பட்சத்தில், அவர்கள் அரசு ஏற்பாடு செய்த ஒரு இடத்தில் தங்களை எட்டு நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும்.

எல்லையிலிருந்து ஹொட்டல் வரை பயணி பயணிப்பதற்கான செலவை அரசு ஏற்றுக்கொள்ளும். ஆனால், ஹொட்டலிலிருந்து வீட்டுக்குச் செல்லும் செலவை பயணிதான் ஏற்கவேண்டும்.

ad

ad