புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 நவ., 2021

கிளிநொச்சி குளங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு! [Monday 2021-11-08 17:00]

www.pungudutivuswiss.com


கிளிநொச்சி மாவட்டத்தில், அண்மைய நாள்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக, இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.
இன்று காலை இரணைமடு குளத்தின் நீர் மட்டம், 22 அடி 9 அங்குலமாக உயர்ந்துள்ளது

கிளிநொச்சி மாவட்டத்தில், அண்மைய நாள்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக, இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது. இன்று காலை இரணைமடு குளத்தின் நீர் மட்டம், 22 அடி 9 அங்குலமாக உயர்ந்துள்ளது

    

இதேபோல், கல்மடு குளத்தின் நீர்மட்டம், 18 அடி 4 அங்குலமாகவும் பிரமந்தனாறு குளத்தின் நீர் மட்டம், 07 அடி 04 அங்குலமாகவும் கனகாம்பிகை குளத்தின் நீர் மட்டம், 10 அடி 9 அங்குலமாகவும் உயர்ந்துள்ளது.

அத்துடன், அக்கராயன் குளத்தின் நீர் மட்டம், 16 அடி 9 அங்குலமாகவும் கரியாலை நாகபடுவான் குளத்தின் நீர் மட்டம், 3 அடி 11 அங்குலமாகவும் புதுமுறிப்பு குளத்தின் நீர் மட்டம், 16 அடி 01 அங்குலமாகவும் குடமுருட்டி குளத்தின் நீர் மட்டம், 6 அடி 4 அங்குலமாகவும் வன்னேரிககுளத்தின் நீர் மட்டம், 09 அடி 1 அங்குலமாக உயர்ந்துள்ளதாக, மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ad

ad