புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 செப்., 2022

சுவிஸில் இருந்து நாடுகடத்தப்படுவோர் குறித்து வெளியாகியுள்ள மோசமான தகவல்கள்!

www.pungudutivuswiss.com

சுவிட்சர்லாந்திலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ள சிலர் மனிதாபிமானமற்ற வகையில், மிகவும் மோசமாக நடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அது தொடர்பாக சமீபத்தில் வெளியாகியுள்ள அறிக்கை ஒன்று, ஜெனீவாவிலிருந்து வலுக்கட்டாயமாக நாடுகடத்தப்பட்ட கர்ப்பிணிப்பெண் ஒருவர், தன் பிள்ளைகளின் கண்களுக்கு முன்பாக, கட்டித் தூக்கப்பட்டு படிகளில் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இன்னொரு தருணத்தில், Vaud மாகாண பொலிசார், ஒரு பெண்ணின் கால்களில் விலங்குகள் மாட்ட மாஸ்க் அணிந்த சிறப்புப்படை அதிகாரிகளின் உதவியை பயன்படுத்தியுள்ளார்கள். இத்தனைக்கும் அந்த பெண் எதிர்ப்பு தெரிவிக்காமல் ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்.

ஒரு நபரால் மற்றவர்களுக்கோ அல்லது அவருக்கோ ஆபத்து ஏற்படலாம் என்று தெரிந்தால் ஒழிய, அவரை இப்படி உடல் ரீதியாக கடினமாக நடத்தக்கூடாது என்கிறது ஆணையம்.

அத்துடன், இப்படி நாடுகடத்தும் அதிகாரிகள் குடும்பத்தினரை பிரிப்பதைக் குறித்தும் விமர்சித்துள்ளது ஆணையம். ஒரு தருணத்தில், ஒரு குடும்பத் தலைவர் ஒரு மாத காலத்துக்கு அவரது மனைவி மற்றும் பிள்ளைகளிடமிருந்து பிரித்துவைக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு மட்டும், சுவிட்சர்லாந்திலிருந்து 130 பேர் கட்டாயப்படுத்தப்பட்டு நாடுகடத்தப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

ad

ad