புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 செப்., 2022

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இடைநிறுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்! [Tuesday 2022-09-13 07:00]

www.pungudutivuswiss.com


ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில்  உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு முழுமையாக இணங்கும் வரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இடைநிறுத்துமாறு வலியுறுத்தினர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு முழுமையாக இணங்கும் வரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இடைநிறுத்துமாறு வலியுறுத்தினர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள், அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக தேவையற்ற பலாத்காரத்தைப் பயன்படுத்துவதைக் கண்டித்துள்ளனர்.

தூதுக்குழுவினர் பொறுப்புக்கூறல் மற்றும் தண்டனையின்மையில் இருந்து விடுபடுவதற்கான உடனடி நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு அழைப்பு விடுத்தனர்.

அதேநேரம் இலங்கை தொடர்பான அறிக்கைக்காக,மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் தனது நன்றியை தெரிவித்தது.

அத்துடன் இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்கான தங்கள் உறுதிப்பாட்டையும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்படக்கூடிய மற்றும் ஒதுக்கப்பட்ட சூழ்நிலைகளில் உள்ள நபர்கள் மற்றும் குழுக்கள் மற்றும் அனைவரின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளை திறம்பட மற்றும் சமமாக நிறைவேற்றுவதற்கான அவசியத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

ad

ad