புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 அக்., 2022

39 நாட்களுக்குப் பிறகு நிதி அமைச்சரை பதவி நீக்கிய பிரித்தானிய பிரதமர்

www.pungudutivuswiss.com

மிக குறுகிய காலத்தில் நிதி அமைச்சரை பதவி நீக்கிய பிரித்தானிய பிரதமர் | Uk Finance Minister Kwarteng Sacked

பிரித்தானியாவின் நிதியமைச்சர் Kwasi Kwarteng வெள்ளிக்கிழமை (அக்டோபர் 14) பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் பிரித்தானியாவில் மிக குறுதி காலத்தில் நிதி அமைச்சராக பதவி வகித்த இரண்டாவது நபர் ஆவார். முன்னதாக 1970ம் ஆண்டு இயன் மக்லியோட் 30 நாட்கள் நிதி அமைச்சராக பணியாற்றியிருந்தார்.

பவுண்டின் பெறுமதி வரலாறு காணாத அளவிற்கு சரிவு

பிரித்தானியாவில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் டொலருக்கு நிகராக பவுண்டின் பெறுமதி வரலாறு காணாத அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது.

அத்துடன் பண வீக்கம் அதிகரித்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் சடுதியாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள லிஸ் டிரஸ் தலைமையிலான அரசாங்கம், கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் தகவல்களை வெளியிட்டார்.

இதன்படி, கடந்த மாதம் 23ம் திகதி வெளியிடப்பட்ட மினி வரவு செலவு திட்ட அறிக்கையில் 45 பில்லியன் பவுண்டு வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து நிதிச்சந்தைகளில் கொந்தளிப்பு ஏற்பட்டது.

புதிய நிதி அமைச்சராக  ஜெர்மி ஹன்ட் நியமனம்

இதனால் பிரித்தானியாவில் கடுமையான நெருக்கடி நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சான்ஸ்லருக்கு கடுமையான எதிரப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இன்று அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மிக குறுகிய காலத்தில் நிதி அமைச்சரை பதவி நீக்கிய பிரித்தானிய பிரதமர் | Uk Finance Minister Kwarteng Sacked

முன்னாள் சுகாதார மற்றும் வெளியுறவுத்துறை செயலாளரான ஜெர்மி ஹன்ட், இப்போது பிரிட்டனின் நிதி அமைச்சராக பணியாற்றுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, நிதி அமைச்சரை பதவி நீக்கம் செய்து, 39 நாட்களுக்குப் பிறகு ஒரு பெரிய பொருளாதாரக் கொள்கையை ரத்து செய்தது கடினமானது என்று பிரித்தானிய பிரதமர் விவரித்துள்ளார்.    

ad

ad