புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 அக்., 2022

கடன் மறுசீரமைப்பு - இந்தியா, சீனா மௌனம்!

www.pungudutivuswiss.com
கடன் மறுசீரமைப்பு - இந்தியா, சீனா மௌனம்!
[Friday 2022-10-14 18:00]
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து துரிதமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என பரிஸ் கிளப் தெரிவித்துள்ளது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து துரிதமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என பரிஸ் கிளப் தெரிவித்துள்ளது

இலங்கை ஒரு நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இருப்பதால், G20 பொதுத் திட்டத்தின் கீழ் சலுகைகளுக்கு விண்ணப்பிக்க முடியாது என்றும் அந்த கிளப் தெரிவித்துள்ளது.

இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பது தொடர்பாக கடந்த மாதம் இந்திய மற்றும் சீன அதிகாரிகளுடன் ‘பரிஸ் கிளப்’ யோசனைகளை பரிமாறிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து துரிதமான பதில் எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை என பரிஸ் கிளப் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா, ஜேர்மனி, அவுஸ்ரேலியா உள்ளிட்ட அபிவிருத்தியடைந்த நாடுகளை பரிஸ் கிளப் உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad