புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 அக்., 2022

மூன்று மாவீரச்செல்வங்களின் தாயாரான அமரர் சரஸ்வதி அம்மா அவர்களின் நினைவினையொட்டி தீவக ரீதியிலான உதைபந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்ட போட்டிகள்










மூன்று மாவீரச்செல்வங்களின் தாயாரான வேலணை அம்பிகாநகரை சேர்ந்த அமரர் சரஸ்வதி அம்மா அவர்களின் முதலாவது ஆண்டு நினைவினையொட்டி அவரது புதல்வரின் நிதி அனுசரணையில் வேலணை அம்பிகாநகர் மகேஸ்வரி மைதானத்தில் தீவக ரீதியிலான உதைபந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றுவருகின்றன .
நேற்றையதினம் ( 14.10.2022 ) அம்பிகாநகர் மகேஸ்வரி மைதானத்தில் வேலணை பிரதேச சபை உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி கிளையின் செயலாளருமான கருணாகரன் நாவலன் அவர்களால் போட்டிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன . மேற்படி ஆரம்ப நிகழ்வில் ஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினர்களான மடுத்தீன் பெனடிக்ற் ( சின்னமணி ) , அ. கனகையா மற்றும் தீவக உதைபந்தாட்ட சங்க உப தலைவர் ரஞ்சித் ஆகியோரும் விருந்தினர்களாக கலந்துகொண்டிருந்தனர் . முப்பதுக்கு மேற்பட்ட அணிகள் கலந்துகொள்கின்ற இப்போட்டித்தொடருக்கான இறுதிப்போட்டிகள் எதிர்வரும் திங்களன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது .

ad

ad