புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 டிச., 2022

வடக்கிற்கு விமானம் மூலம் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர நடவடிக்கை

www.pungudutivuswiss.com


வடக்கு ரயில் பாதை ஜனவரியில் தற்காலிகமாக மூடப்படுவதால், விமானம் மூலம் சுற்றுலா பயணிகளை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

வடக்கு ரயில் பாதை ஜனவரியில் தற்காலிகமாக மூடப்படுவதால், விமானம் மூலம் சுற்றுலா பயணிகளை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது

வடக்கு மாகாணத்துக்கான ரயில்பாதை திருத்தப் பணிகளுக்காக மூடப்படுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் ரயில் பாதை சுமார் 06 மாதங்களுக்கு திருத்தம் செய்யப்பட உள்ளதால் யாழ் குடா நாட்டிற்கு வரும் சுற்றலா பயணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் அவர், தற்போது நாட்டில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதுடன், வருகின்ற ஆண்டும் அதிகளவான சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.

இதனால் யாழ்ப்பாணத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம், எனவே ரயில் சேவை இடைநிறுத்தப்படுவதால், பயணிகள் பாதிக்கப்படுவார்கள்.

ஆகவே சுற்றுலா பயணிகளை விமானம் மூலம் அழைத்து வருவற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நாட்டில் சிவில் விமான சேவைகள் குறைவாக உள்ள நிலையில், ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டால் சுற்றுலா துறை மேலும் பாதிக்கும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து யாழ் பலாலி விமான நிலையத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ad

ad