புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 டிச., 2022

மேய்ச்சல் தரை இல்லை! PHIஇற்கு தகவல் வழங்கும் அயல்வீட்டார் - மாடுகளை இழந்த நபரின் ஆதங்கம்

www.pungudutivuswiss.com

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகள் உயிரிழந்தன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் நூற்றுக்கணக்கான விலங்குகள் பலியாகியிருந்தன.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு - ஒட்டுச்சுட்டான் பகுதியை சேர்ந்த நபரொருவர் கண்ணீர்விட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேய்ச்சல் தரை கூட இல்லை


இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இங்கு எமக்கு மேய்ச்சல் தரை இல்லை. இந்த விடயத்தை நாம் அறிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இடம்பெயர்ந்து வந்ததில் இருந்து நாம் இவற்றை நம்பி தான் இருக்கிறோம். வீட்டில் சாப்பிடாமல் இருந்து நாம் மாடுகளை வளர்க்கிறோம். அரை ஏக்கர் காணியில் அருகருகே வீடுகள்.

பக்கத்து வீடுகளில் இருந்து PHIஇற்கு தகவல் வழங்குகிறார்கள் மாடுகளை வீட்டில் வைத்திருப்பதாக. எங்களை யார் திரும்பிப் பார்ப்பது?

நாம் இவற்றை நம்பி தானே இருக்கிறோம் என கண்ணீர் விட்டபடி தனது கவலைகளை கொட்டித் தீர்த்துள்ளார்.  

ad

ad