புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 டிச., 2022

முதலமைச்சர் கான்வாயில் தொங்கியபடி பயணித்தது ஏன்? - சென்னை மேயர் பிரியா பதில்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாகனத் தொடரணியில் (கான்வாய்) சென்னை மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் காரில் தொங்கிக்கொண்டு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

அவ்வாறு தொங்கிக்கொண்டு சென்றது ஏன் என்று பிபிசி தமிழிடம் பிரத்யேகமாகப் பேசிய சென்னை மேயர் பிரியா ராஜன் பதிலளித்துள்ளார்.

உயரிய பொறுப்பான மேயர் பதவியில் உள்ளவரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் காரில் தொங்கியபடி சென்றது ‘தவறான முன்னுதாரணம்’ என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (டிச. 10) மேன்டோஸ் புயல் பாதிப்புகள் குறித்து சென்னை பாலவாக்கத்தில் ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அவர் வழங்கினார். பின்னர், அங்கிருந்து காசிமேட்டுக்கு சென்ற முதலமைச்சர், மீனவர்களிடம் மழை, புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். புயலால் பாதிக்கப்பட்ட படகுகளையும் அவர் பார்வையிட்டார். அப்போது அமைச்சர்கள் பி. சேகர் பாபு, கே.என்.நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

 

முதலமைச்சர் காசிமேட்டுக்கு ஆய்வுக்காக சென்றபோது கான்வாயில் இருந்த எஸ்யூவி கார் ஒன்றில் சென்னை மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ எபினேசர் உட்பட 4 பேர் தொங்கியபடி சென்றனர். இந்த காணொளி உடனடியாக சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த காணொளிக்கு பல்வேறு தரப்பினரும் பலவித கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

விமர்சனமும் ஆதரவும்

உயர் பொறுப்புகளில் உள்ள மேயர், மாநகராட்சி ஆணையர் இருவரும் காரில் தொங்கியபடி சென்றது தவறான முன்னுதாராணமாகிவிடும் என நெட்டிசன்கள் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இச்சம்பவத்தை மாணவர்கள் பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு வருவதோடு ஒப்பிட்டும் சிலர் பதிவிட்டுள்ளனர்.

 

மேலும், இச்சம்பவம் தொடர்பாக திமுகவையும் பலர் விமர்சித்து வருகின்றனர். திமுகவை சேர்ந்த சில பெண் தலைவர்களை குறிப்பிட்டு, அவர்கள் இவ்வாறு காரில் தொங்கிக்கொண்டு செல்வார்களா? ஏன் சென்னை மேயர் இவ்வாறு செல்ல வேண்டும் என்ற கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

 

சென்னை மேயர் பிரியா

பட மூலாதாரம்,TWITTER @ANNAMALAI_K

நெட்டிசன்கள் மட்டுமல்லாது பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் இதுதொடர்பாக திமுகவை விமர்சித்துள்ளனர். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தன் ட்விட்டர் பக்கத்தில், “சுயமரியாதை இயக்கம். சமூக நீதி இயக்கம். சாமானியர்களின் கட்சி.

 

திமுகவின் இந்த போலிக் கதைகள் அனைத்தும் இறந்து புதைந்து வெகுநாட்களாகிவிட்டன. திமுகவால் அது மீண்டும் வெளிப்பட்டுவிட்டது” என அப்புகைப்படத்தை வெளியிட்டு விமர்சித்துள்ளார். 

 

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

விமர்சனங்களுக்கு மத்தியில் சென்னை மேயர் பிரியா, தன் பணிக்காகவே அவ்வாறு காரில் தொங்கியபடி சென்றதாக திமுகவினர் பலரும் அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

 

'' நாங்கள் மக்களின் தேவைக்காகவே ஓடினோம்; ஓட்டுக்காக அல்ல,'' என்று இது குறித்து திமுக எம்.எல்.ஏ ஜே.ஜே.எபினேசர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ad

ad