புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 டிச., 2022

இலங்கை இராணுவ அதிகாரிக்கு அமெரிக்க விதித்துள்ள தடை

www.pungudutivuswiss.com

த நேஷன் என்ற ஆங்கில பத்திரிகையின் துணை ஆசிரியராக கடமையாற்றிய கீத் நொயாரை கடத்திச் சென்று சித்திரவதை செய்து தாக்குதல் நடத்தியமை சம்பந்தமான குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள இராணுவ அதிகாரியான மேஜர் பிரபாத் புளத்வத்தவுக்கு அமெரிக்க தடைகளை விதித்துள்ளது.

த நேஷன் என்ற ஆங்கில பத்திரிகையின் துணை ஆசிரியராக கடமையாற்றிய கீத் நொயாரை கடத்திச் சென்று சித்திரவதை செய்து தாக்குதல் நடத்தியமை சம்பந்தமான குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள இராணுவ அதிகாரியான மேஜர் பிரபாத் புளத்வத்தவுக்கு அமெரிக்க தடைகளை விதித்துள்ளது

கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் இந்த சம்பவம் நடந்தது. ஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்திச் சென்றதாக கொழும்பு ரிப்போலி இராணுவ முகாமில் இராணுவ அணி ஒன்றுக்கு பொறுப்பாக கடமையாற்றிய புளத்வத்தவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது.

அவருக்கு எதிராக தற்போது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா விதித்துள்ள இந்த தடைகளுக்கு அமைய பிரபாத் புளத்வத்த அமெரிக்காவுக்குள் வரவும் அமெரிக்காவில் சொத்துக்களை வாங்கவும் உரிமையாக்கி கொள்வது உட்படட பலவற்றுக்கு எதிராக இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது.

சர்வதேச ஊழல் தடுப்பு தினம் மற்றும் சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு, பல நாடுகள் மனித உரிமைகளை மீறிய மற்றும் ஊழலுடன் தொடர்புடையவர்களுக்கு தடைகளை விதித்துள்ளதுடன் இலங்கையில் இந்த தடைக்கு உள்ளாகிய ஒரே அதிகாரி மேஜர் பிரபாத் புளத்வத்த என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad