தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனை யாழ் மாநகர முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் இன்று சந்தித்து கலந்துரையாடினார். இச் சந்திப்பானது யாழ்ப்பாணத்திலுள்ள விக்னேஸ்வரனின் இல்லத்தில் இடம்பெற்றது
குறித்த சந்திப்பில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் ஆராயப்பட்டு, இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.