புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2023

கல்வித் தகைமையை மறைத்த தமிழ் எம்.பிக்கள்

www.pungudutivuswiss.com


நாடாளுமன்ற உறுப்பினர்கள் 208 பேரினது கல்வி தகைமை தொடர்பான விபரங்கள் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி  தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கல்வி தகைமையில் பின்தங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 208 பேரினது கல்வி தகைமை தொடர்பான விபரங்கள் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கல்வி தகைமையில் பின்தங்கியுள்ளமை தெரியவந்துள்ளது


நாடாளுமன்றத்தில் உள்ள 208 உறுப்பினர்கள் தமது கல்வி மற்றும் தொழில் தகைமைகளை நாடாளுமன்ற செயலகத்திற்கு அறிவித்துள்ளனர். எனினும் 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தகவல்களை நாடாளுமன்ற செயலகத்திடம் ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு பிறப்பித்த உத்தரவின் பிரகாரம், இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவரங்களை www.parliament.lk என்ற நாடாளுமன்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், நோகராதலிங்கம், மற்றும் சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான காதர் மஸ்தான் ஆகியோர், உயர்தரம் வரை பயின்றுள்ளதுடன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஐ.சி.எம்.ஏ இல் நான்காம் தரத்தை பூர்த்தி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவராசா கலையரசன் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் வரை பயிற்றுள்ளதாக நாடாளுமன்ற இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் தீலிபன், பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன், சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரின் கல்வித் தகைமைகள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை.

ad

ad