புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2023

யாழ்.பொற்பதியில் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு

www.pungudutivuswiss.com



யாழ்ப்பாணம் கொக்குவில் பொற்பதி வீதியில் தனியார் காணி ஒன்றில் விடுதலைப்
 புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட 
இடத்தினை  அகழ்வதற்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு குறித்த பகுதியினை அகழ்வு செய்யும் பணி இன்றைய தினம்  திங்கட்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது. 

பொற்பதி வீதியில் விடுதலைப் புலிகளின் முகாம் அமைந்திருந்த பகுதியில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த பகுதியில் தேடுதல் நடாத்தி , ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ள இடங்களில் அகழ்வுகளை மேற்கொள்ள  இன்றைய தினம் திங்கட்கிழமை நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு , அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. 

ad

ad