புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 பிப்., 2023

அவிஷ்கவின் அரைச் சதத்தால் தோல்வியை தவிர்த்த ஜப்னா அணி

www.pungudutivuswiss.com
இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் ஜப்னா – கொழும்பு அணிகள் மோதிய 5ஆவது லீக் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று (05) நிறைவுக்கு வந்தது.

அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் மனோஜ் சரத்சந்திரவின் அரைச் சதங்கள், நுவன் பிரதீப், தரிந்து ரத்நாயக ஆகியோரது 6 விக்கெட்டுகள் மூலம் சகலதுறையிலும் பிரகாசித்த கொழும்பு அணி, ஜப்னா அணிக்கு எதிரான போட்டியை சமநிலையில் முடித்துக்கொண்டது.

இதன்படி, அவிஷ்க பெர்னாண்டோ தலைமையிலான கொழும்பு அணி, முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றுக் கொண்டது.

கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 02ஆம் திகதி ஆரம்பமாகிய இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா அணி, ரொன் சந்திரகுப்தவின் அரைச் சதத்தின் உதவியுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்து 199 ஓட்டங்களை எடுத்தது.

கொழும்பு அணியின் பந்துவீச்சில் தரிந்து ரத்நாயக 4 விக்கெட்டுகளையும், நுவன் பிரதீப் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

ஜப்னா அணிக்காக 2ஆவது அரைச் சதமடித்த ரொன் சந்திரகுப்த
சீரற்ற காலநிலையால் கைவிடப்பட்ட இரண்டாம் நாள் ஆட்டம்
ஜப்னா அணிக்கெதிராக அரைச் சதமடித்த அவிஷ்க பெர்னாண்டோ
அதனைத் தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கொழும்பு அணி, அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் மனோஜ் சரத்சந்திரவின் அரைச் சதங்களின் உதவியுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்து 289 ஓட்டங்களை எடுத்தது.

ஜப்னா அணியின் பந்துவீச்சில் லஹிரு மதுசங்க மற்றும் கவிந்து பத்திரத்ன ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

இதனையடுத்து 90 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த ஜப்னா அணி, 8 விக்கெட்டுக்களை இழந்து 228 ஓட்டங்களை பெற்றிருந்த போது, போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது. அந்த அணியின் துடுப்பாட்டத்தில் அவிஷ்க தரிந்து 50 ஓட்டங்களையும், லஹிரு மதுசங்க 43 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.

கொழும்பு அணியின் பந்துவீச்சில் நுவன் பிரதீப் 3 விக்கெட்டுகளையும், தரிந்து ரத்நாயக மற்றும் கசுன் ராஜித் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீதமும் வீழ்த்தியிருந்தனர்.

இதேவேளை, கடந்த 3 நாட்களாக சீரற்ற காலநிலையில் தொடர்ந்து பாதிக்கப்பட்ட தம்புள்ள மற்றும் கண்டி அணிகளுக்கிடையிலான போட்டி கடைசி நாளான இன்றைய தினமும் (05) எந்தவொரு பந்தும் வீசப்படாமல் நிறைவுக்கு வந்தது. இதனால் இரு அணிகளுக்குமிடையிலான போட்டி எந்தவொரு முடிவும் இன்றி நிறைவடைந்தது.

ad

ad