-

6 அக்., 2025

5 தனிப்படையால் அசைக்கவே முடியவில்லை: இளைஞர்கள் ஆனந்திற்கு கொடுக்கும் பாதுகாப்பு ! Posted by By user

www.pungudutivuswiss.com
5 தனிப்படையால் அசைக்கவே முடியவில்லை: இளைஞர்கள் ஆனந்திற்கு கொடுக்கும் பாதுகாப்பு !

புஷி -ஆனந்தின் மோபைல் போன் கடைசியாக, Switch Of

f செய்யப்பட்ட லாக்கேஷன் KK நகர். அங்கே வலை வீசி தேடி வருகிறார்கள்……. More Updates… 

கரூரில் நடந்த சம்பவத்தை ஏன் திட்டமிட்ட சதி என்று பலர் கூறுகிறார்கள் ? அதற்கு ஒரு முக்கியமான காரணம் உள்ளது. 27ம் திகதி அந்த சம்பவம் நடந்தால், ஒரு 3 நாட்கள் செல்லும் அதனை ஊதிப் பெரிதாக்க. அதன் பின்னர் வர உள்ள பண்டிகை மற்றும் விடுமுறைகளை கணக்குப் பார்த்தால், நீதிமன்றங்கள் மூடி இருக்கும். முன் ஜாமீன் வாங்குவது, ஜாமீன் மனுக்கள் என்று எதனையும் இலகுவாக நகர்த்த முடியாது. இந்தவேளைகளில் TVK கட்சியின் 2ம் கட்ட தலைவர்களை கைது செய்வது என்ற பக்கா திட்டத்தை தீட்டியது திமுக மற்றும் செந்தில் பாலாஜி & CO.

TVK தலைவர் விஜயை கைது செய்யக் கூடாது என்பதில் திமுக திட்டவட்டமாக உள்ளது. காரணம் பல தலைவர்கள் கைதின் பின்னர் தான் பெரிய அளவில் செல்வாக்கைப் பெற்றார்கள். உதாரணம் சீமான், வைகோ, வேல் முருகன் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

இதனால் TVK கட்சியின் 2ம் கட்ட தலைவர்களை கைது செய்து சில மாதங்கள் சிறையில் வைத்தாலே போதும் விஜயால் மக்கள் சந்திப்புகளை செய்ய முடியாத நிலை தோன்றும். இதனால் அவர் முடங்கி விடுவார் என்ற கணக்கை போட்டது திமுக. சொல்லப் போனால் அதில் அவர்கள் சற்று வெற்றிபெற்றுள்ளார்கள் என்று தான் சொல்லவேண்டும். தற்போது விஜய் அவர்கள் முடங்கிக் கிடக்கிறார், அதனை விட என்ன செய்வது என்று தெரியாமல் ஆலோசனை நடத்தி வருகிறார் விஜய். இதனை தான் திமுக எதிர்பார்த்தது.

TVK கட்சியின் 2ம் கட்ட தலைவர்களை கைது செய்ய முற்பட்டவேளை, TVK கட்சியின் இளைஞர் அணி புஷி ஆனந்தை தமது பொறுப்பில் எடுத்துக் கொண்டார்கள். அவரை தமிழக காவல் துறையால் தேடிக் கண்டு பிடிக்க முடியவில்லை. இதனால் தமிழக காவல் துறை 5 தனிப் படையை அமைத்து ஆனந்தை தேடி வரும் நிலையில், ஒரு சிறிய துப்புக் கூட கிடைக்கவில்லை. ஆனந்தின் மோபைல் போன் கடைசியாக, Switch Off செய்யப்பட்ட லாக்கேஷன் KK நகர். அங்கே வலை வீசி தேடி வருகிறார்கள். அவர் என்ன முட்டாளா KK நகரில் இருக்க ?

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, CM சாரின் உற்ற நண்பர் என்பது ஏற்கனவே வெளிச்சத்திற்கு வந்த நிலையில். நீதிபதி செந்தில் குமார் அவர்கள், முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். ஆனால் TVK தற்போது உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளது. அங்கே CM சாருக்கு ஆதரவான நீதிபதி இருக்க வாய்ப்பில்லை. இந்த நிலையில் முன் ஜாமீன் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். அதன் பின்னரே விஜய் களத்தில் இறங்குவார் என்று எதிர்பார்கப்படுகிறது. இது இவ்வாறு இருக்க தமிழக பொலிசார் கண்ணில் எண்ணையை ஊற்றி புஷி ஆனந்தை தேடி வருகிறார்கள். ஆனால் ஒரு பெரும் இளைஞர் பட்டாளமே அவருக்கு பாதுகாப்பு கொடுத்து அவரை, மறைத்து வைத்திருக்கிறார்கள். மக்கள் சக்தியே மகேசன் சக்த்தி என்பார்கள். இதனை பொலிசாரும் சரி CM சாரும் சரி மறந்து விட்டார்கள் என்பதே உண்மை !

இனித்தானே பாக்கப் போற இந்த காளியோட ஆட்டத்தை என்பது போல, இது நாள் வரை பதுங்கி இருக்கும் விஜய் அவர்கள் புது புது யுக்திகளோடு களம் இறங்க உள்ளார். அவர் வெளியே வரும்போது திமுக அரசு தலை தெறிக்க ஓடும்.

ad

ad