புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 அக்., 2025

சுவிட்சர்லாந்தில் தண்ணீரில் விழுந்தவரைக் காப்பாற்றச் சென்ற பொலிசாருக்கு நேர்ந்த துயரம்

www.pungudutivuswiss.com

சுவிட்சர்லாந்தில் அணை ஒன்றிற்குள் விழுந்தவரைக் காப்பாற்றச் சென்ற பொலிஸ் துறையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தண்ணீரில் விழுந்த நபர்

ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.15 மணியளவில், சுவிட்சர்லாந்தின் சூரிக் மாகாணத்தில், Limmat நதியில், Dietikon மின் நிலையத்தின் முன்னால் ஒருவர் தண்ணீரில் தத்தளிப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் தண்ணீரில் விழுந்தவரைக் காப்பாற்றச் சென்ற பொலிசாருக்கு நேர்ந்த துயரம் | Swiss Cop Diver Dies In Limmat Rescue Operation

அவர்கள் அங்கு விரைந்தபோது அந்த நபரைக் காணாததால் படகுகள், ஹெலிகொப்டர்கள் மூலம் அவரைத் தேடத்துவங்கியுள்ளார்கள். 

சுவிட்சர்லாந்தில் முன்வைக்கப்பட்ட ஒரு அருமையான போக்குவரத்து திட்டம்: ஆனால்

சுவிட்சர்லாந்தில் முன்வைக்கப்பட்ட ஒரு அருமையான போக்குவரத்து திட்டம்: ஆனால்

அவரைக் கண்டுபிடிக்கமுடியாததால், அவரை தண்ணீருக்குள் இறங்கித் தேடுவதற்காக பொலிஸ் துறையைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர் ஒருவர் நதியில் இறங்கியுள்ளார். 

சுவிட்சர்லாந்தில் தண்ணீரில் விழுந்தவரைக் காப்பாற்றச் சென்ற பொலிசாருக்கு நேர்ந்த துயரம் | Swiss Cop Diver Dies In Limmat Rescue Operation

ஆனால், அந்த 44 வயது ஆழ்கடல் நீச்சல் வீரர், விபத்தொன்றில் படுகாயமடைந்து உயிரிழந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

ad

ad