தனிநபர் முதலீட்டாளர் வகை வதிவிட வீசா திட்டத்தின் கீழ், முதல் வீசா இன்று வழங்கப்பட்டது.
ஜெர்மன் நாட்டு மருத்துவர் டாக்டர் பாய் ட்ரெச்சல் (Pay Drechsel) இந்த முதலீட்டு வீசாவை பெற்ற முதல் நபராக பதிவாகியுள்ளார் என பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.
குறைந்தது 100,000 அமெரிக்க டாலர் முதலீடு செய்வோருக்கு 5 ஆண்டுகள் காலத்திற்கு வதிவிட வீசா வழங்கப்படுகின்றது.
200,000 அமெரிக்க டாலர் அல்லது அதற்கு மேற்பட்ட முதலீடு செய்வோருக்கு 10 ஆண்டுகள் காலத்திற்கு வதிவிட வீசா வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பதாரர்கள் இலங்கையில் இயங்கும் உரிமம் பெற்ற வணிக வங்கியில் Visa Programme Foreign Currency Account (VPFCA) திறந்து அதில் நிதி வைப்பு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டம் மூலம், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நீண்டகால வதிவிட வாய்ப்பை வழங்கி, இலங்கைக்கு நேரடி வெளிநாட்டு முதலீட்டை (FDI) ஊக்குவிப்பதே அதிகாரிகளின் குறிக்கோளாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.