வடக்கு கல்விப்புலத்தில் என்றுமில்லாதவாறு அரசியல் தலையீடுகள்! [Wednesday 2025-10-01 15:00] |
![]() வடக்கு மாகாணக் கல்விப்புலத்தில் என்றுமில்லாதவாறு தேவையற்ற அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளன. தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களுக்கே நன்மைகள் கிடைக்கின்றன என்று இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது |
இதுதொடர்பில் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த காலங்களில் ஆசிரியர்களின் உரிமை பற்றிப் பேசியிருந்த ஜே.வி.பி.சார்பு ஆசிரியர் தொழிற்சங்கம். இன்று அரசாங்க அமைச்சர்களாலும், பிரதி அமைச்சர்களாலும் ஆட்கொள்ளப்பட்டு, ஏனைய தொழிற் சங்கங்களை நசுக்கும் செயற்பாட்டிலும், கல்விப்புலத்தை அச்சுறுத்தும் செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றது. இடமாற்றச் சபைகளின் தீர்மானங்களையே ஒருதலைப்பட்சமாக மாற்றியமைக்கும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இதுபோன்ற அரசியல் தலையீடுகள் முன்பிருந்த எந்த ஆட்சியிலும் நடைபெற்றதில்லை. வடமாகாணத்தில் நடைபெறும் இடமாற்றங்களில் அதிகாரிகளை அச்சுறுத்தி ஒருதலைப்பட்சமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. தமது ஆதரவாளர்களுக்கு இடமாற்ற மேன்முறையீட்டுசபையின் அங்கீகாரமின்றி. வடமாகாண ஆளுநரால் இடமாற்றங்களை நிறுத்தும் செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன. சில முறைகேடுகள் மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது. இதுபோன்ற செயற்பாடுகள் தொடருமாயின், இலங்கை ஆசிரியர் சங்கம் பரந்துபட்ட தொழிற்சங்கச் செயற்பாடுகளையும் முன்னெடுக்கும் -என்றுள்ளது. |
-
2 அக்., 2025
www.pungudutivuswiss.com