உக்ரைனிய நகரங்களை குறிவைத்து ரஷ்யா தீவிர தாக்குதல்! [Wednesday 2025-10-01 07:00] |
![]() உக்ரைனிய நகரங்களை குறிவைத்து ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல் அந்நாட்டு ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைனிய நகரங்களை குறிவைத்து கடந்த 24 மணி நேரத்தில் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலை ரஷ்யா நடத்தி இருப்பதாக உக்ரைன் அரசு தரப்பு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் சுமார் 51 வான்வழி தாக்குதலையும், 4463 தரைவழி தாக்குதலையும் ரஷ்யா நடத்தி இருப்பதாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது |
மேலும் இதில் 5,531 காமிகேஸ் ட்ரோன்களும் ஏவப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் ரஷ்யாவின் இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட குறைந்தது 5 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். அதே சமயம், உக்ரைனிய படைகளும் தற்காப்பு தாக்குதல் நடத்தி பல தாக்குதல்களை முறியடித்து இருப்பதாக தெரிவித்துள்ளது. அவற்றின் படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4 டாங்கிகள், ஒரு கவச வாகனம், 27 பீரங்கிகள், 301 ட்ரோன்கள், ஒரு ஹெலிகாப்டர் ஆகியவை அழிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
-
2 அக்., 2025
www.pungudutivuswiss.com