புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 அக்., 2025

www.pungudutivuswiss.com

    சர்வதேச நீதி கோரி செம்மணியில் போராட்டம்! 
    Top News

    [Wednesday 2025-10-01 15:00]
    
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதிநாள் போராட்டம் இன்றைய தினம் நடைபெற்றது.

    வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதிநாள் போராட்டம் இன்றைய தினம் நடைபெற்றது.

    யாழ். செம்மணியில் கடந்த 25ஆம் திகதி ஆரம்பமான இந்தப் போராட்டம் இன்று வரை முன்னெடுக்கப்பட்டது.

    போராட்டத்தின் இறுதி நாளான இன்றைய தினம் பகல் 1 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தீப்பந்தங்களை ஏந்தி நின்றனர்.

    அதேவேளை சர்வதேச சிறுவர் தினத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

    உள்நாட்டு யுத்தத்தின்போது நடத்தப்பட்ட மனித உரிமைமீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டமை உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி விவகாரத்திற்கு நீதி கோரியும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

    இப்போராட்டத்தில், வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், போராட்டத்தின் ஆரம்பத்தில் “அணையா விளக்கு” பகுதியில் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தி போராட்டத்தை ஆரம்பித்தனர்.

    இதில் கலந்துகொண்டவர்கள் “சிறிலங்காவில் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம்”, “தமிழ் இன அழிப்புக்கும் காணாமல் ஆக்கப்படுதல் போர் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம்” என்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

       
       Bookmark and Share Seithy.com

    • Welcome

    ad

    ad