-

22 அக்., 2025

இறங்குதுறை குறிக்கட்டுவானிற்கு புனர்வாழ்வு!

www.pungudutivuswiss.com


தென்னிலங்கை சிங்கள மக்களது யாழ்ப்பாண வருகையில் முக்கிய பங்கினை வகிக்கும் நயினாதீவு நாகதீப விகாரைக்கு பயணிக்கும் குறிக்கட்டுவான் இறங்குதுறையை அபிவிருத்தி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

நயினாதீவு நாகவிகாரையின் விகாராதிபதியின் கோரிக்கையின் பேரில் கடற்படை வசமுள்ள குறிக்கட்டுவான் இறங்குதுறையே அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

நயினாதீவு மற்றும் நெடுந்தீவு உள்ளிட்ட தீவுகளையும் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் இணைக்கும் பிரதான சமுத்திர அணுகல் வழியாக குறிகட்டுவான் இறங்குதுறை பயன்படுத்தப்படுகின்றது.

தற்போது காணப்படுகின்ற இறங்குதுறை நீண்டகாலமாக புனரமைப்புக்கள் மேற்கொள்ளப்படாமையால், பாரியளவிலான கட்டமைப்பு ரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

போக்குவரத்து, யாத்திரிகர் பயணங்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தியில் இறங்கு துறையின் முக்கியத்துவத்தை அடையாளங் கண்டு இடைநிலை வரவு செலவுத்திட்ட சட்டகத்தின் கீழ் குறிகட்டுவான் இறங்குதுறையை நிர்மாணிக்கின்ற வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பதில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தை நாள்தோறும் வந்தடையும் சிங்கள சுற்றுலாப்பயணிகள் பெருமளவில் பயணிக்கின்ற இடமாக நயினாதீவு நாகவிகாரை உள்ளது.எனினும் தமிழ் மக்களது பூர்வீக மண்ணான நயினாதீவில் எந்தவொரு சிங்கள குடியிருப்புக்களும் இல்லாதுள்ளது. 

ad

ad