-

22 அக்., 2025

கொல்லப்பட்ட பிரதேச சபைத் தலைவர் 'ஹரக் கட்டா'வின் நெருங்கிய கூட்டாளியாம்! வெலிகம பிரதேச சபை தலைவர் சுட்டுக்கொலை! [Wednesday 2025-10-22 18:00]

www.pungudutivuswiss.com

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர, மீது அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கித்தாரிகளால் இன்று துப்பாக்கிச் சூடு  நடத்தப்பட்டுள்ளது.  துப்பாக்கிதாரிகள் மோட்டார் சைக்கிளில் வந்து, பிரதேச சபை அலுவலகத்தில் விக்ரமசேகர தனது உத்தியோகபூர்வ நாற்காலியில் அமர்ந்திருந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு அவர் மரணமடைந்துள்ளார்.

துப்பாக்கிதாரிகள், பிரதேச சபை தலைவரிடம் கடிதம் ஒன்றில் கையொப்பம் பெறுவது போன்று பிரவேசித்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள 'ஹரக் கட்டா' என்ற நதுன் சிந்தகவின் நெருங்கிய கூட்டாளியாக அவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் நடைபெற்று வருகின்றன.

ad

ad