-

22 அக்., 2025

இஷாராவைக் கடத்திய ஆனந்தன் கிளிநொச்சியில் கைது! [Wednesday 2025-10-22 18:00]

www.pungudutivuswiss.com


கணேமுல்ல சஞ்சீவாகொலை தொடர்பாக நேபாளத்தில் கைது செய்யப்பட்டு  நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி, மனித கடத்தல்காரரான ஆனந்தன் என்பவரால் இந்தியாவிற்கு கடத்தப்பட்டார் என்பது தெரியவந்துள்ளது. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பல சந்தேக நபர்களையும் அவர் நாடு கடத்தியுள்ளார். இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

கணேமுல்ல சஞ்சீவாகொலை தொடர்பாக நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி, மனித கடத்தல்காரரான ஆனந்தன் என்பவரால் இந்தியாவிற்கு கடத்தப்பட்டார் என்பது தெரியவந்துள்ளது. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பல சந்தேக நபர்களையும் அவர் நாடு கடத்தியுள்ளார். இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

கிளிநொச்சி பகுதியில், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் ஆனந்தன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கனேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் நேபாளத்திலிருந்து கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி வழங்கிய தகவலுக்கு அமைய, குறித்த ஆட்கடத்தல்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இஷாரா அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது, தம்மை யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு அழைத்துச் சென்றவர்கள் தொடர்பான தகவல்களை அவர் காவல்துறையினருக்கு வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் இஷாராவை மூன்று நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கவைத்து, இந்தியாவிற்கு அனுப்பிவைத்தமை தொடர்பில் 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில், நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட பின்னர், இங்கிருந்து தப்பிச் செல்வோரை கடல் மார்க்கமாக அழைத்துச் செல்லும் பிரதான ஆட்கடத்தல்காரரும் அடங்குவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குற்றச் செயல்களில் ஈடுபட்ட பலரை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

திட்டமிட்ட குற்றத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவியதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. கிளிநொச்சியில் உள்ள வீட்டின் உரிமையாளர், சந்தேக நபரை தப்பிச் செல்ல ஏற்பாடு செய்தவர் என்றும், படகை வழங்கியவர் என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.

இஷாரா செவ்வந்திக்கு தங்குமிடம் வழங்கி நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவியதாகக் கூறப்படும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட ஒன்பது பேரை பொலிஸார்இதுவரை கைது செய்துள்ளனர்.

பிப்ரவரி 19 ஆம் திகதி புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்த பின்னர், தொடங்கொட மற்றும் மித்தெனிய பகுதிகளில் இருந்த சந்தேக நபரான செவ்வந்தி, மே 6 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் நாளில் யாழ்ப்பாணத்திற்குத் தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேக நபர் இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல படகு வழங்கிய நபருக்கு அதற்காக 2.5 மில்லியன் ரூபாய் பணம் கொடுத்துள்ளதாகவும் பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்கு உதவுவதற்காக, படகை வழங்கிய நபர் மூன்று இளைஞர்களை வேலைக்கு அமர்த்தியிருப்பது விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.

ad

ad