-

5 நவ., 2025

மாவீரர் நாள் அனுஷ்டிப்பு தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட சிறீதரன் எம்.பியின் சாரதி!

www.pungudutivuswiss.com

கடந்த ஆண்டு(2024) ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் வார நிகழ்வுகளின்
போது தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் திருவுருவப்படங்களை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, சிறீதரன் எம்பியின் சாரதியும், கரைச்சி பிரதேச சபையின் உருத்திரபுரம் வட்டார உறுப்பினருமாகிய திரு பாரதிதாசன் எழில்வேந்தன் அவர்கள் நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.
கிளிநொச்சி மாவட்ட பொலிசாரினால் நேற்று முந்தினம் திடீர் வழக்குத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நேற்றைய தினம் விசாரணைக்காக நீதிமன்றில் திரு வேந்தன் அவர்கள் முன்னிலையான நிலையில் அவர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி கிறேசிகனின் வாதத்தையடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு(2025) மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கான ஏற்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் குறித்த சூழலில், ஏறக்குறைய பன்னிரண்டு மாதங்களுக்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட பெற்றோர் கௌரவிப்பு நினைவேந்தல் நிகழ்வில் பயன்படுத்தப்பட்ட மாவீரர்களின் திருவுருவப்படங்களினை காரணம் காட்டி, இரண்டு நாட்களுக்கு முன் திடீர் வழக்குத்தாக்கல் செய்து கௌரவ பிரதேச சபை உறுப்பினர் என்றும் பாராமல் திரு வேந்தன் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நடவடிக்கையானது, தமிழ்த்தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நோக்கிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கையானது கடந்த கால அரசாங்கங்களைப் போலவே தற்போதைய அரசாங்கமும் தமிழ்த்தேசிய நினைவேந்தல் நிகழ்வுகளை அச்சுறுத்தி தடுக்கும் வகையிலேயே மேற்கொண்டுவருகின்றது

ad

ad