-

5 நவ., 2025

அடப்பாவி நீயா அந்த தமிழ் அடியான்...?

www.pungudutivuswiss.com

வன்னியில் 2004 ம் ஆண்டு சமாதான ஒப்பந்த இறுதிக்காலத்தில் வ்வுனியாவில் இருந்து வன்னிக்குள் வேலைக்காக வருகிறான் ஒரு தமிழ் இளைஞன்.
அரச ஊதுகுழல் வானொலியான “வானம்பாடியில்” பணிபுரிந்த இந்த இளைஞன் அரசபுலனாய்வாளகளால் நன்கு பயிற்றுவிக்கப் பட்டு உளவு வேலைகளுக்காக வன்னிக்குள் அனுப்பி வைக்கப்படுகிறான்.
ஆரம்பத்தில் புலிகளின் மருத்துவ பிரிவிற்குள் நுளைந்த இந்த இளைஞன் திட்டமிட்டபடி “புரட்சி நிலவன்” என்ற புனைபெயருடன் புலிகளின் வானொலி செய்திப்பிரிவுக்குள் நுளைகிறான்.
நவம்பர் 27, 2007ம் ஆண்டு கிளிநொச்சி A9 ஙீதியின் 156ம் கட்டை பகுதியில் அமைந்திருந்த புலிகளின் குரல் வானொலி மீது பாரிய கிபிர் விமானத்தாக்குதல் ஒன்று தடந்தப்பட்டது. அந்த தாக்குதலில் சுபா என்ற இசைவிழி உட்பட மூன்று பணியாளர்களும பல பொதுமக்களும் கொல்லப்பட்டார்கள்.
கட்டுநாயக்காவில கிபிர் கிளம்பினால் வன்னிக்கு உடனடியா தகவல்கள் வந்துவிடும் , கிபிர் வருவதற்கு முன்னர் பாதுகாப்பை தேடி பங்கருக்குள் சென்றுவிடுவார்கள். அது வழமை.
அன்றும் அத்தகவல் வந்ததும் வன்னியில் உள்ள அனைவரை போலவே அனைத்து புலிகளின் குரல் பணியாளர்களும் பதுங்கு பாதுகாப்பு தேடி உட்சென்றனர்.
கடந்த மூன்று வருட காலமும் கிபிர் வரும் தகவல் அறிந்து வழமையாக பதுங்குகுழி சென்ற இந்த இளைஞன் அன்று மட்டும் பதுங்கு குழி செல்லாமல் அருகில் உள்ள UNHCR கட்டடத்துக்குள் அத்து மீறி பாதுகாப்பு தேடி ஓடினான்.
ஏனெனில் அவனுக்கு இன்று புலிகளின் குரல் வானொலி மீது தான் கிமிர் குண்டு தாக்குதல் விழப் போகின்றது என முற்கூட்டியே திடமாக தெரிந்துள்ளது.
தாக்குதலின் பின்னர் இதை சந்தேகம் கொண்டு மோப்பம் பிடித்த புலிகளின் புலனாய்வுத்துறை நடவடிக்கை எடுக்க ஆளை தேட முற்படுகையில் இரவோடு இரவாக நெடுங்கேணி ஊடாக “எஸ்கேப்” ஆகி வ்வுனியா இராணவப் புலனாய்வாளகளிடம் சேர்ந்துவிட்டார்.
இந்த இளைஞன் தான் இன்று YouTubeல் வலம் வரும் “தமிழ் அடியான்”.
(அதன்பின்னர் ஈபிடிபியின் இதயவீணையில் சேர்ந்து புலிகள் மூது சேறு இறைத்தது எல்லாம் வேறு விடயம். )
கிபிர் தாக்குதலுக்காக தாக்குதல் இலக்கு Target Acquisition களை வழங்குவதற்காக இராணுவப்புலனாய்வாளர்களால் அனுப்பப்பட்ட நூற்றுக்கணக்கான” Ground Observation Recon “ உளவாளிகளில் ஒருவர்தான் “ தமிழ் அடியான்” என்ற உண்மை புலிகளின் புலனாய்வாளர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.
புலிகளின் குரல் வானொலி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்த உளவாளி உதவியது போன்று 02 நவம்பர் 2007 ம் ஆண்டு பிரிகேடியர் தமிழ்செல்வன் படுகொலை, 14 ஆகஸ்ட் 2006 செஞ்சோலை ப்படுகொலை போன்றவற்றிற்கும் பின்னால் இவனது involvement இருக்கலாம் என இன்றும் உயிருடன் இருக்கும் முன்னாள் புலனாய்வு போராளிகள் நம்புகின்றனர்.
வைத்தியர் அர்ச்சுனாவுடன் இவனது தொடர்புகள் ஊரறிந்தது.
மகிந்த குடும்பத்துடன் அர்ச்சுனாவின் தொடர்புகள் ஊரறிந்தது.
கூட்டிக்கழித்து பாருங்கள் கணக்கு சரியாக வரும்.

ad

ad