-

14 மே, 2011

















































































நான் ஆசைப்பட்டது நடந்துவிட்டது :
நடிகர் விஜய் பரபரப்பு பேட்டி

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.   இதில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து நடிகர் விஜய் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை போயஸ்கார்டனில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’நான் தேர்தலுக்கு முன்பே ஆட்சி மாற்றம் வேண்டும் என்று கூறிவந்தேன்.


ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதற்காக என் தந்தை அதிமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்தார். 
வாக்குப்பதிவு அன்று ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்ததும்,  மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள்.   அவர்கள் ஆசை நிறைவேற வேண்டும் என்று விரும்புகிறேன் என பேட்டி அளித்தேன்.

என் ஆசையும் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதுதான்.   நான் ஆசைப்பட்டது நடந்துவிட்டது’’ என்று தெரிவித்தார்.
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தோல்வி
 
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தோல்வி
சென்னை, மே. 13-
அ.தி.மு.க.வில் இருந்து பலர் கடந்த ஆண்டுகளில் விலகி தி.மு.க.வில் சேர்ந்தனர். அப்படி கட்சி மாறி வந்தவர்களில் கருப்பசாமி பாண்டியன், முத்துசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு ஆகியோர் போட்டியிட தி.மு.க.வில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் தோல்வி முகத்தில் உள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் முத்துசாமி போட்டியிட்டார். அவரை எதிர்த்து தே.மு.தி.க. சார்பில் சந்திரகுமார் போட்டியிட்டார். 2-வது சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிவில் சந்திரகுமார் 6677 வாக்குகள் பெற்றார். முத்துசாமி 3698 ஓட்டுக்களுடன் தோல்வி முகத்தில் இருந்தார்.
அருப்புக்கோட்டை தொகுதியில் கே.கே.எஸ். எஸ்.ஆர்.ராமச்சந்திரன் போட்டியிட்டார். அவர் அ.தி.மு.க. வேட்பாளர் வைகை செல்வனிடம் தோல்வி அடையும் நிலையில் உள்ளார். அது போல தென்காசி தொகுதியில் கருப்பசாமி பாண்டியன் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரிடம் தோல்வியை தழுவுகிறார்.
திருச்செந்தூர் தொகுதியில் கடந்த தேர்தலில் அனிதா ராதாகிருஷ்ணன் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வென்றிருந்தார். தி.மு.க.வில் சேர்ந்த அவர் இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வென்றார். ஆனால் தற்போது அவர் தோல்வி முகத்தில் உள்ளார். அ.தி. மு.க. வேட்பாளர் மனோகரிடம் அவர் தோல்வியை தழுவுகிறார்.
வடசென்னை மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்த சேகர்பாபு சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க. வில் சேர்ந்தார். அவர் மீண்டும் ராதாகிருஷ்ணன் தொகுதியில் தி.மு.க. சார்பில் களம் இறக்கப்பட்டார். அவரை எதிர்த்து வெற்றிவேலை அ.தி.மு.க. நிறுத்தியது. இதனால் சென்னை முழுக்க ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி தேர்தல் முடிவை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். இன்று ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிவேல் முன்னிலை பெற்றார்.
சேகர்பாபுக்கு குறைந்த வாக்குகளே கிடைத்தன. இதனால் அவர் தோல்வியை தழுவி உள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் சேகர்பாபுக்கு மக்களிடம் தனி செல்வாக்கு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அ.தி.மு.க.வுக்கு ஆதரவான அலையில் அவரும் தோல்வியை தழுவினார்.

10 மே, 2011

.
.

பிழையான அரசியல் தலைமைத்துவத்தினால் வடக்கின் கல்வித்துறை பாதிக்கப்பட்டிருந்தது : டக்ளஸ் குற்றச்சாட்டு-புங்குடுதீவு கமலாம்பிகை பவளவிழாவில் உரை 
[ செவ்வாய்க்கிழமை, 10 மே 2011, 08:13.19 AM GMT ]
பிழையான அரசியல் தலைமைத்துவங்களினால் வடக்கின் கல்வித்துறை பாதிக்கப்பட்டிருந்ததாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தற்போது வடக்கின் கல்வித்துறையை மீள மறுசீரமைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலத்தின் 75ம் ஆண்டு நிறைவு நிகழ்வுகளில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை உருவாக்குவதற்கு நாட்டின் சகல பிரதேசங்களும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சுவிட்சர்லாந்த் ஈ.பீ.டி.பீ அமைப்பாளர்களான 
வ.ஜெயக்குமார் (பாபு),எஸ்.சண்முகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர் 
புங்.கமலாம்பிகை வித்தியாலய பவள விழா நிகழ்வுகள் நாளை
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-05-04 08:01:46| யாழ்ப்பாணம்]

புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகாவித்தியாலய பவள விழா நிகழ்வுகள் நாளை காலை 9மணிக்கு பாடசாலை மண்டபத்தில் நடைபெறும்.இரு அமர்வுகளாக நடைபெறும் இந் நிகழ்வில் முதல் அமர்வு வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திருமதி சு.விஜயலட்சுமி தலைமையில் நடைபெறும்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முய ற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா கலந்து கொள்கிறார்.சிறப்பு விருந்தினர்களாக தீவகம் வலயக் கல்விப் பணிப்பாளர் ஜீ.வி.இராதாகிருஷ்ணன், ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சியின் 
சுவிஸ் கிளை பொறுப்பாளர்கள் வ.ஜெயக்குமார், எஸ்.சண்முகநாதன் ஆகியோரும், கெளரவ விருந்தின ராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கே.கமலேந்திரன் ஆகி யோரும் கலந்து கொள்கின்றனர்.

நிகழ்வில் தொடர்ந்து கமலமலர் நூல் வெளியீடும்,வாழ்த்துரைகளும், மாணவர் கெளரவிப்பும் இடம்பெறும்.அதிபர் நா.நாகராசா தலைமையில் நடை பெறும் மாலை நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் நா.சண்முகலிங்கன் பிரதம விருந்தினராக கலந்து கொள்கிறார்.சிறப்பு விருந்தினராக தீவகம் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஐ.புவனேந்திரன்,வேலணை கோட்டக் கல்வி அதிகாரி கு.சரவணபவன்,ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சியின் புங்குடு தீவு பொறுப்பாளர் ஐ.சிவநேசன் ஆகியோரும், கெளரவ விருந் தினர்களாக ஓய்வு பெற்ற அதிபர் ந.இராசதுரை, கிராம அலுவலர் எஸ்.சிவா ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

மாலை நிகழ்வுகளில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும்,பட்டிமன்றம் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன



நன்றி --வலம்புரி 

7 மே, 2011

மாண்புமிகு அமைச்சர் டக்ளசோடு சுவிஸ் ஊரதீவு பாபுவும் வரதீவு சண்முகமும் சேவை செய்கிறார்கள் வாழ்க இவர்களது தொண்டு -பூனை இல்லாத வீட்டில் எலிகளின் அட்டகசமோ -நன்றி யாழ் நெட் 


ஊரதீவு பாபுவும் வரதீவு சண்முகமும் 

6 மே, 2011



[ Friday, 06-05-2011, 10:46:05 ]
உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவ அதிகாரிகளை ஈடுபடுத்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளார்.
[ Friday, 06-05-2011, 08:03:45 ]
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்பிலான அறிக்கையை சரத் பொன்சேகா சாதகமாக பயன்படுத்திக் கொள்வார் என்ற அச்சத்தில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பிந்திய செய்திகள்
[ Saturday, 07-05-2011 02:55:16 ]
முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து கடந்த மார்ச் மாதம் காணாமற்போன நான்கு கடற்படையினர் தொடர்பில் இதுவரை எதுவித தகவலும் கிடைக்கவில்லை என்று கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.
[ Saturday, 07-05-2011 02:10:21 ]
வெலிக்கடைச் சிறைக்குள்ளிருந்தபடியே கப்பம் அறவிடும் செயற்பாடுகளை மேற்கொண்ட இரண்டு கைதிகளின் வங்கிக் கணக்குகளைப் பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகள்
[ 07-05-2011 02:09:07 ]
ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களை கடுமையாக எதிர்ப்பதாக மாலைதீவு தெரிவித்துள்ளது.
[ 07-05-2011 02:03:06 ]
இலங்கையின் ஆதிவாசிகளான வேடுவர்களின் தலைவர் ஊருவரிகே வன்னியெலத்தோவிற்கும் ஊடகப் பேச்சாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
[ 07-05-2011 01:54:57 ]
ஓர் இனம் அழிவதையும், அந்த இனத்தைச் சார்ந்தவர்களே அவர்கள் அழிவதற்குக் காரணமாக இருந்ததையும், பின் அவர்களே அனைத்தையும் வேடிக்கை பார்த்ததும், உலகில் வேறு எங்காவது கண்டது உண்டா?
[ 07-05-2011 01:50:54 ]
சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்சிந்தை கலங்காதிருப்பது நன்றோ தமிழா என் அன்பான உலகத்தமிழ் உறவுகளே! இன்று நாம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சூழ்நிலையில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.
[ 07-05-2011 01:48:15 ]
வெளிநாட்டில் எம்.பி. ஆன முதல் ஈழத் தமிழர் எனும் பெருமையைப்  பெற்று இருக்கிறார் ராதிகா சிற்சபை ஈசன்.
[ 07-05-2011 01:44:33 ]
'இலங்கை அரசால் பாதுகாப்பான பகுதி’ என்று அறிவிக்கப்பட்டதாகப் பொய் சொல்லி, அப்பாவி மக்களைக் கொன்​றொழித்த சிங்கள ராணுவத்தின் காட்டு தர்பார் அங்கு இருந்த மருத்துவமனைகளையும் விட்டு​வைக்கவில்லை!
[ 07-05-2011 01:42:28 ]
போலிக் கடன் அட்டைகள் மூலம் மோசடியாக பணம் சுருட்டிவந்த மட்டக்களப்பு பொறியியலாளர் ஒருவர் தலைமையிலான குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது.
[ 07-05-2011 01:33:45 ]
இருபதாம் நூற்றாண்டு ஜேர்மனியில் நடந்த யூத இனப் படுகொலை காரணமாக ஜெனோசைற்(Genocide)என்ற புதிய சர்வதேசச் சட்டம் ஜநாவால் உருவாக்கப்பட்டது. இனப் படுகொலைத் தடுப்புத் தண்டனைச் சட்டம் (The Convention on the Prevention and Punishment of Genocide) டிசம்பர் 1948ல் நிறைவேற்றப்பட்டு இன்று நடைமுறையில் உள்ளது.
[ 07-05-2011 01:30:47 ]
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த ஐக்கிய நாடுகள் நிபுணர்குழுவை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் நேற்றுக் கலைத்துள்ளார்.
(2ம் இணைப்பு)
[ 06-05-2011 20:28:39 ] []
உலகத்தின் கருத்தூன்றிய பார்வையில் இன்று அதிகம் உச்சரிக்கப்படும் பெயராகத் தமிழினத்தின் பெயர் மாறியிருக்கின்ற காலமிது. உரிமை தேடும் இனங்களின் கருத்துகளும் போராட்டங்களும் சர்வதேசத்தால் சாதகமான அறிகுறிகளோடு எதிர் நோக்கப்படும் சூழல் விரிந்து வருகிறது.
[ 06-05-2011 16:39:33 ]
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது நடந்ததாகத் தெரிவிக்கப்படும் சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தென்னாபிரிக்காவின் ஆளும் கட்சியான ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
[ 06-05-2011 16:26:12 ]
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சட்டத்தரணி சுமந்திரன், சுரேஸ் பிறேமச்சந்திரன், பொன் செல்வராசா, சீ.யோகேஸ்வரன், ஸ்ரீதரன், சரவணபவன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் இன்று காலை  புதிய மகசின் சிறைச்சாலைக்கு விஜயம் செய்துள்ளனர்.
[ 06-05-2011 16:19:16 ]
வவுனியா நகரசபையில் தொடரும் குழப்பநிலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நாளை காலை வவுனியா நகரசபைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
“ஆட்சியை மாற்ற முனைகிறீர்களா?” பிளேக்கிடம் பதறினார் கோத்தாபய - வெளிவரும் சந்திப்பு இரகசியங்கள்
[ வெள்ளிக்கிழமை, 06 மே 2011, 00:03 GMT ] [ கார்வண்ணன் ]
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்குச் சென்ற அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கைச் சந்தித்த எந்தவொரு தமிழரும் சிறிலங்கா மீது போர்க்குற்ற விசாரணை நடத்துமாறு கோரவில்லை என்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

வன்னிக்கான பயணத்தை அடுத்து சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை பாதுகாப்பு அமைச்சில் சந்தித்துப் பேசியிருந்தார் றொபேட் ஓ பிளேக்.

இதன்போது பேசப்பட்ட விடயங்கள் பற்றி இருதரப்பும் தகவல் வெளியிடவில்லை.

ஆனால் இந்த சந்திப்பின் போது, கோத்தாபய ராஜபக்சவிடம் குறுக்கு விசாரணை நடத்துவது போன்று பிளேக் கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும், ஆட்சிமாற்றத்துக்கு அமெரிக்கா முனைகிறதா என்ற கோத்தாபய ராஜபக்ச கலக்கத்தோடு அவரிடம் விசாரித்தகாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் பிளேக்குடனான சந்திப்பில் பேசப்பட்ட சில விடயங்கள் தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார் கோத்தாபய ராஜபக்ச.

“வன்னிக்குச் சென்றிருந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலரிடம், போரினால் இடம்பெயர்ந்து மீளக்குடியேறியுள்ள மக்கள், போதிய தொழில்வாய்ப்பின்றி இருப்பதையே அடிப்படையான பிரச்சினையாக எடுத்துக் கூறியுள்ளனர் என்று கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிளேக்குடனான சந்திப்பு ஊக்கமளிப்பதாக இருந்தது என்று குறிப்பிட்ட அவர், போருக்குப் பிந்திய நிலைமைகளில் அமெரிக்காவும், சிறிலங்காவும் இணைந்து பணியாற்ற முடியும் என்று நம்புவதாகவும் கருத்து வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கக் குழுவினர் சிறிலங்கா விமானப்படையின் உலங்குவானூர்தியிலேயே வன்னிக்குச் சென்றனர் என்றும் அவர்களை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு படைத் தளபதிகள் வரவேற்று அங்குள்ள நிலைமைகள் குறித்து விளக்கமளித்தாகவும் கோத்தாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவில் ஆட்சி மாற்றத்துக்கான முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபடவில்லை என்ற உறுதிமொழியை பிளேக் தன்னிடம் தந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கடல்சார் பாதுகாப்பு முறையில் சிறிலங்கா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாடு என்று பிளேக் தன்னிடம் கூறியதாகவும் கோத்தாபய ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

போர் முடிவுக்கு வந்த பின்னரும் வடக்கு, கிழக்கில் செயற்படும் ஆயுதக்குழுக்கள் உள்ளிட்ட சில விவகாரங்கள் குறித்தும் தன்னிடம் பிளேக் விசாரித்ததை கோத்தாபய ராஜபக்ச ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆயுதக்குழுக்களிடம் இருந்து ஆயுதங்களைக் களைய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தான் அதற்கு விளக்கமளித்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகள் பற்றிய தகவல்கள் இருந்தால் தன்னால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் பிளேக்கிடம் கூறியதாகவும் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

போரில் இறந்தவர்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்க அரசாங்கம் பின்னடிப்பது குறித்தும் கோத்தாபய ராஜபக்சவிடம் பிளேக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு, “போர் நடந்ததால் பல ஆண்டுகளாக குடித்தொகை மதிப்பீடுகள் நடத்தப்படவில்லை. தற்போது அந்த மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்போது போரில் மரணமானவர்களின் விபரங்களையும் திரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது“ என்று அவருக்கு விளக்கிக் கூறியுள்ளதாகவும் கோத்தாபய ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
போர்முனையில் என்ன நடந்தது? தனக்கே நன்றாகத் தெரியும் என்கிறார் சிறிலங்கா இராணுவத் தளபதி
[ வெள்ளிக்கிழமை, 06 மே 2011, 07:50 GMT ] [ கார்வண்ணன் ]
ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையை தவறானது என்ற சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய இன்று நிராகரித்துள்ளார்.

கிழக்குப் பகுதிக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள அவர், இன்று காலை வெலிக்கந்த படைத்தளத்தில் சுமார் 2000 சிறிலங்காப் படையினர் மத்தியில் உரையாற்றினார்.

அங்கு கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய,

“ ஐ.நாவின் அறிக்கையை நான் முழுமையாக வாசித்துள்ளேன். அது முற்றிலும் பக்கச்சார்பாகவே தொகுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் நன்மதிப்பைக் குறைக்கும் வகையிலான தவறான தகவல்களை அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

போரின் இறுதிக்கட்டத்தில் வன்னிக் களமுனை நடவடிக்கைகளுக்குத் தளபதியாக இருந்த எனக்கு அங்கு என்ன நடந்தது என்பது நன்றாகத் தெரியும்.

இந்த அறிக்கை நாட்டினதும், அதிபரினதும், பாதுகாப்புச் செயலரினதும் மதிப்பை குன்றச்செய்யும் வகையில் அமைந்துள்ளது.

சில குழுக்களும் தனிநபர்களும் கொடுத்துள்ள தகவல்களின் அடிப்படையிலேயே தருஸ்மன் அறிக்கை தொகுக்கப்பட்டுள்ளது.  ஆனாலும் அவை ஆதாரமற்றவை“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
ஐநாவில் இருந்து சிறிலங்காவை நீக்குமாறு மலேசியத் தமிழர்கள் கோரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 06 மே 2011, 09:18 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ]
சிறிலங்காவை ஐநாவிலிருந்து நீக்க கோரி மலேசியாவில் உள்ள 130 அரசசார்பற்ற நிறுவனங்கள் கையெழுத்திட்ட மனுவொன்று மலேசிய ஐநா பணியகத்தில் கையளிக்கப்பட்டது.

நேற்று வியாழக்கிழமை [05-05-2011] செம்பருத்தி இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஒன்றுகூடல் நிகழ்வு குறித்து அந்த அமைப்பு பிரதிநிதி நாடுகடந்த தமிழீழ அரசாங்க-தகவல்துறை அமைச்சகத்தின் நாதம் ஊடகசேவைக்கு கருத்துரைதிருந்தார்.

அவரது கருத்துரைப்பின்போது, 1949  ஜெனிவா உடன்படிக்கையை மீறி மனித உரிமைக்கு மீறலாக தமிழ்மக்களை போரில் கொன்றொழித்த சிறிலங்கா அரசு மீது அனைத்துலக நீதிமன்றம் விசாரணை தொடர வேண்டுமென கோரப்பட்டுள்ளதோடு ஐ.நா ஆய்வு குழு வழங்கிய தகவல்கள் அடிப்படையில் சிறிலங்கா அரசின்மீது நடவடிக்கை எடுக்கவும் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் மிக மோசமான மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியிருக்கும் சிறிலங்கா அரசினை ஐ.நா அங்கத்துவத்தில் இருந்து நீக்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

வெளிநாடுகளில் புலி ஆதரவாளர்கள் என வீரவசனம் பேசுவோர் கவனத்திற்கு!

Published on May 5, 2011-5:41 pm   ·   No Comments
மேற்குலக நாடுகளில் தாங்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்றும் சிலர் தாங்களே விடுதலைப்புலிகளின் தூண்கள் என்றும் வீரவசனம் பேசித்திரிகின்ற போதிலும் வடக்கு கிழக்கில்விடுதலைப்போராட்டத்திற்காக தங்களின் முழுக்குடும்பங்களையே தியாகம் செய்த பலர் மிகப்பெரிய பரிதாப நிலையிலேயே உள்ளனர்.
வெறும் 5ஆயிரம் ரூபா பணம் இல்லாததால் தொடர்ந்து சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலைக்கு மட்டக்களப்பில் உள்ள முன்னாள் போராளி தள்ளப்பட்டிருக்கிறார்.
2004ஆம் ஆண்டு வந்தாறுமூலையில் கைது செய்யப்பட்ட மூதூர் கிளிவெட்டியைச்சேர்ந்த கந்தசாமி கரன் என்பவர் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது வந்தாறுமூலையில் வைத்து படையினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
இவர் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஆயுதப்பயிற்சி பெற்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி சிவபாதசுந்தரம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இவர் கடந்த 7 ஆண்டுகளாக தடுத்து வைத்துள்ளதை கவனத்தில் கொண்டு 5ஆயிரம் ரூபா காசுப்பிணையிலும் இரண்டு சரீரப்பிணையிலும் செல்வதற்கு அனுமதித்தார்.
இந்த இளைஞரின் பெற்றோர் உறவினர்கள் அனைவரும் வன்னி போரில் கொல்லப்பட்டு விட்டதால் அவரை பிணையில் எடுப்பதற்கு உறவினர்கள் யாரும் வரவில்லை. இவரின் மனைவியும் இவர் கைது செய்யப்பட்ட பின் வேறு ஒருவரை திருமணம் முடித்து சென்று விட்டார். இந்நிலையில் இவரை பிணை எடுப்பதற்கு யாரும் முன்வராத நிலையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
ஒரு போராளியை 5ஆயிரம் ரூபா செலுத்தி பிணையில் எடுப்பதற்கு யாரும் அற்ற நிலையிலேயே இன்று பல முன்னாள் போராளிகளின் வாழ்க்கை இருப்பதாக நமது கிழக்கு மாகாண செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
விடுதலைப்புலிகள் இயக்கம் என கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பல இளைஞர்களுக்கு நீதிமன்றத்தில் அவர்களுக்காக வாதாடுவதற்கோ அல்லது அவர்களை பிணையில் எடுப்பதற்கோ யாரும் அற்ற நிலையே இன்று காணப்படுகிறது.

ad

ad