பிந்திய செய்திகள்
| |||||||||||||
செய்திகள் [ 07-05-2011 02:09:07 ]
[ 07-05-2011 02:03:06 ]
[ 07-05-2011 01:54:57 ]
[ 07-05-2011 01:50:54 ]
[ 07-05-2011 01:48:15 ]
[ 07-05-2011 01:44:33 ]
[ 07-05-2011 01:42:28 ]
[ 07-05-2011 01:33:45 ]
[ 07-05-2011 01:30:47 ]
(2ம் இணைப்பு) [ 06-05-2011 20:28:39 ] [
[ 06-05-2011 16:39:33 ]
[ 06-05-2011 16:26:12 ]
[ 06-05-2011 16:19:16 ]
|
| ||||||
[ வெள்ளிக்கிழமை, 06 மே 2011, 09:18 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ] | ||||||
நேற்று வியாழக்கிழமை [05-05-2011] செம்பருத்தி இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஒன்றுகூடல் நிகழ்வு குறித்து அந்த அமைப்பு பிரதிநிதி நாடுகடந்த தமிழீழ அரசாங்க-தகவல்துறை அமைச்சகத்தின் நாதம் ஊடகசேவைக்கு கருத்துரைதிருந்தார். அவரது கருத்துரைப்பின்போது, 1949 ஜெனிவா உடன்படிக்கையை மீறி மனித உரிமைக்கு மீறலாக தமிழ்மக்களை போரில் கொன்றொழித்த சிறிலங்கா அரசு மீது அனைத்துலக நீதிமன்றம் விசாரணை தொடர வேண்டுமென கோரப்பட்டுள்ளதோடு ஐ.நா ஆய்வு குழு வழங்கிய தகவல்கள் அடிப்படையில் சிறிலங்கா அரசின்மீது நடவடிக்கை எடுக்கவும் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் மிக மோசமான மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியிருக்கும் சிறிலங்கா அரசினை ஐ.நா அங்கத்துவத்தில் இருந்து நீக்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். |
வெளிநாடுகளில் புலி ஆதரவாளர்கள் என வீரவசனம் பேசுவோர் கவனத்திற்கு!
Published on May 5, 2011-5:41 pm · No Commentsவெறும் 5ஆயிரம் ரூபா பணம் இல்லாததால் தொடர்ந்து சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலைக்கு மட்டக்களப்பில் உள்ள முன்னாள் போராளி தள்ளப்பட்டிருக்கிறார்.
2004ஆம் ஆண்டு வந்தாறுமூலையில் கைது செய்யப்பட்ட மூதூர் கிளிவெட்டியைச்சேர்ந்த கந்தசாமி கரன் என்பவர் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது வந்தாறுமூலையில் வைத்து படையினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
இவர் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஆயுதப்பயிற்சி பெற்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி சிவபாதசுந்தரம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இவர் கடந்த 7 ஆண்டுகளாக தடுத்து வைத்துள்ளதை கவனத்தில் கொண்டு 5ஆயிரம் ரூபா காசுப்பிணையிலும் இரண்டு சரீரப்பிணையிலும் செல்வதற்கு அனுமதித்தார்.
இந்த இளைஞரின் பெற்றோர் உறவினர்கள் அனைவரும் வன்னி போரில் கொல்லப்பட்டு விட்டதால் அவரை பிணையில் எடுப்பதற்கு உறவினர்கள் யாரும் வரவில்லை. இவரின் மனைவியும் இவர் கைது செய்யப்பட்ட பின் வேறு ஒருவரை திருமணம் முடித்து சென்று விட்டார். இந்நிலையில் இவரை பிணை எடுப்பதற்கு யாரும் முன்வராத நிலையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
ஒரு போராளியை 5ஆயிரம் ரூபா செலுத்தி பிணையில் எடுப்பதற்கு யாரும் அற்ற நிலையிலேயே இன்று பல முன்னாள் போராளிகளின் வாழ்க்கை இருப்பதாக நமது கிழக்கு மாகாண செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
விடுதலைப்புலிகள் இயக்கம் என கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பல இளைஞர்களுக்கு நீதிமன்றத்தில் அவர்களுக்காக வாதாடுவதற்கோ அல்லது அவர்களை பிணையில் எடுப்பதற்கோ யாரும் அற்ற நிலையே இன்று காணப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக