வவுனியாவிலிருந்து கண்டிக்கு திருமண வைபவம் ஒன்றிற்கு சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி!
கண்டி பஸ் நிலையத்தில் இருந்து ஹட்டனுக்குச் செல்வதற்காக நள்ளிரவில் காத்திருந்த பயணி ஒருவரை ஆட்டோ ஒன்றில் அழைத்துச் சென்ற முடிச்சுமாறி ஒருவர் தேநீரில் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்து, மயக்கி, உடைமைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு அவரை வட்டவளைப் பகுதியில் கைவிட்டுச் சென்றுள்ளார்.