ராமதாஸ் கைதினால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை பற்றிய மேலதிக செய்திகளுக்கு எம் இணைய தளத்தோடு இணைந்திருங்கள்
-
30 ஏப்., 2013
ராமதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு - விபரம்!
பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு 15 நாள் சிறையில் வைக்கப்படுகிறார். அவர் கைது செய்யப்பட்டதற்கான வழக்கு விபரம் :
143, 188,சி.எல்.ஏ.7(1) (a) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை பொதுமக்களுக்கு தொந்தரவு தருதல், சட்டவிரோதமாக கூட்டம் நடத்துதல், காவல்துறை தடையை மீறுதல் போன்ற சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கறிஞர்கள் மூன்று நாட்களுக்கு பின் ஜாமீனில் வெளிவர வாய்ப்பு உள்ளது என குறிப்பிடுகின்றனர். நாளை மே -1 என்பதால் அரசு விடுமுறை. அதனால் நாளை ஜாமீன் வாங்க முடியாது. நாளை மறுதினம் தான் பாமக வழக்கறிஞர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தடைமீறு - பாமகவினருக்கு ராமதாஸ் உத்தரவு
கடந்த 25 ந்தேதி பாமக மாமல்லபுரத்தில் சித்திரை நாள் குடும்ப விழா கூட்டம் நடத்தியது. இதில் கலந்துக்கொள்ள பாமகவினர் கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் போது மரக்காணத்தில் பாமகவினருக்கும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈழப்பிரச்சினைக்கு ஆதரவாக மக்கள் நேரடியாக களம் இறங்கினால் சோவியத் ரஷ்யா போன்று இந்தியா துண்டு, துண்டாகத்தான் உடைந்து போகும் என மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி கடந்த 16ம் திகதி பொள்ளாச்சியில் இருந்து ஈரோடு வரை நடைபயணத்தை மதிமுக., பொது செயலாளர் வைகோ தொடங்கினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)