முதலமைச்சர் வேட்பாளர் யாரென அறிவித்தால் விவாதத்துக்கு வருவேன்!- தவராசாவுக்கு விக்னேஸ்வரன் சவால்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை உத்தியோகபூர்வமாகவும் பகிரங்கமாகவும் அறிவித்தால் அவருடன் விவாதம் நடத்த தயார் என்று தமிழ்க் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.