ராஜீவ் காந்தியை படுகொலை செய்ய உத்தரவிட்டது பிரபாகரன் தான்: கே.பி
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்ய உத்தரவிட்டது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என கேபி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
மட்டு அம்பாறை மக்கள் வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரம்..
அம்பாறை மாவட்டத்தின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தலைமையில் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ்தேசியக்கூட்டமைப்பின் உள்ளூராட்சிமன்றங்களின் தவிசாளர்கள், உப தவிசாளர்கள், மாநகரசபையின் எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் அடங்கலான குழுவினர் வடமாகாண சபைத்தேர்தலில் பிரச்சார நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று மாலை வந்திறங்கினர். நாளைமுதல் தொடர்ச்சியாக பலபகுதிகளிலும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்..
13 செப்., 2013
பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டம்: அத்வானி புறக்கணிப்பு
பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கலந்து கொள்ளவில்லை.
டெல்லி மாணவி பலாத்கார வழக்கு! குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு.
ஓடும் பேருந்தில் டெல்லி மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி விரைவு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
விடுதலைப் புலிகளை அமெரிக்காவின் உதவியுடன் எவ்வாறு அழித்தோம்: கோத்தபாய விளக்கம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் மிதக்கும் ஆயுத களஞ்சியங்களை ஆழ் கடல் பகுதியில் வைத்து அழிக்க அமெரிக்கா உதவியாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில், ஆளுநர் சந்திரசிறி கலந்து கொண்டது பிரச்சினைக்குரியது: கெஹெலிய
வடக்கில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களை ஆதரித்து நடக்கும் தேர்தல் கூட்டங்களில் மாகாணத்தின் ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி கலந்து கொண்டமை பிரச்சினைக்குரியது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியதி மதிய குழு உறுப்பினரும் தாயாக விடுதிக்கு பெரும் பங்கற்றியவருமான குகரசன் அவர்கள் இன்று தனது ஐம்பதாவது அகவையினுள் காலடி வைக்கிறார் இவரை இன்னும் இன்னும் இனிதே நீடூழி வாழ்கவென வாழ்த்துகிறோம்
ஈகைப்பேரொளி இரட்ணசிங்கம் செந்தில்குமரனின் வீரவணக்க நிகழ்வு
வீரவணக்க நிகழ்வு இருபுறங்களும் மலைகளால் சூழப்பட்ட வலே மாநிலத்தில் 11.09.2013 மதியம் 12.00 மணிக்கு ஆரம்பமானது. ஈகைப்பேரொளியின் திருவுடல் அவரின் உறவினர்களால் தாங்கி வரப்பட்டு மண்டபத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டு ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் குடும்பத்தினரால் சமயக்கிரிகைகள் நடாத்தப்பட்டது.
கொழும்பு - கிளிநொச்சிக்கு தினமும் மூன்று ரயில் சேவைகள்! ஞாயிறு முதல் ஆரம்பம்
கொழும்பு, கோட்டையிலிருந்து கிளிநொச்சிக்கு எதிர்வரும் 15 ம் திகதி முதல் தினமும் மூன்று ரயில்கள் புறப்படவுள்ளன.அதற்கான ஆசனங்களை முன் கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம் என ரயில்வே
தமிழ் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை! மகிந்த
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக தேர்தல்கள் திணைக்கள ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தம்புள்ள பள்ளிவாசல் அகற்றப்படும் அபாயம்!- நிர்வாகத்தினர் கவலை
மாத்தளை மாவட்டம் தம்புள்ள புனித பூமி அபிவிருத்தி திட்டம் தொடர்பாக புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள வரை படத்திலும் தம்புள்ள ஹைரியா பள்ளிவாசலை அகற்றுவதற்கு அடையாளமிடப்பட்டுள்ளதாக நிர்வாகம் கவலை வெளியிட்டுள்ளது.
பிரபாகரன் கேட்டதையே கூட்டமைப்பு கேட்கிறது என மகிந்த கூறியது வெட்கத்திற்குரியது! - சீ.வி.விக்கினேஸ்வரன்
தம்பி பிரபாகரன் கேட்டதையே தமிழ்தேசிய கூட்டமைப்பும் கேட்பதாக சிறீலங்காவின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் கருத்து மிகவும் வெட்கத்திற்குரியது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சட்டம் படித்ததாக கூறிக்கொள்ளும் ஒருவருக்கு தனிநாட்டு கோரிக்கைக்கும், சமஷ்டிக்கும் வித்தியாசம் தெரியாதா எச்னவும் கேள்வி எழுப்பியுள்ளார்
கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க கோரி ஆர்ப்பாட்டம்! திருமாவளவன் உட்பட 200 பேர் கைது
சென்னையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் நடக்க உள்ள கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் செப்டம்பர் 12ம் திகதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
நீதி கேட்டு ஐ.நா. முன்றலில் மாபெரும் போராட்டம்!- சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு
16.09.2013 ஐ.நா. முன்றலில் நடைபெறவிருக்கும் மாபெரும் ஊர்வலத்திலும் கவனஈர்ப்பு போராட்டத்திலும் கலந்து கொள்வதுடன், எமது ஈகைப்பேரொளி செந்தில்குமரனுக்கும் வணக்கம் செலுத்தி அவன் கோரிக்கைக்கு வலுச்சேர்க்க வேண்டிய அவசியம் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கிறது.
லண்டன் நகரின் அமைந்துள்ள கடையொன்றில் புகுந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் இலங்கைத் தமிழர் ஒருவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
லிவர்பூல் பிரதேசத்தின் லித்தர்லேண்ட் என்ற பகுதியில் அமைந்துள்ள கடையொன்றுக்குள் புகுந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள், கடை ஊழியரான மில்டன் தர்மலிங்கம் என்ற தமிழர் மீதே தாக்குதல் நடத்தியுள்ளனர்.