-
29 நவ., 2013
விடுதலைப் புலிகளின் தமிழீழ தேசிய மாவீரர் நாள் அறிக்கை!
அன்பான தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். வாழையடி வாழையாக எமது முன்னோர்கள் வாழ்ந்து வந்த எமது தாயகமண்ணைக்காத்திடவும் எமது எதிர்காலச் சந்ததியினர் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்ந்திட வேண்டும் என்பதற்காகவும் தம் இன்னுயிரை ஈகம் செய்த புனிதர்களை வணங்கும்
28 நவ., 2013
முல்லைத்தீவில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், நேற்று மாலை 6.05 மணியளவில் ஈகைச்சுடரேற்றி மாவீர்களுக்கு வணக்கம் செலுத்தினார். இந்நிகழ்வில் தங்கள் உறவுகளை இழந்த பொது மக்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
மறவர்கள் சிந்திய ரத்தம் எங்கள் கடல் நீரில் கலந்தே இருக்கிறது. அந்த நீரைப் பருகுகிற மீன்களைத் தான் எம் மக்கள் உண்கிறார்கள். அவர்களின் உடல்கள் எம் மண்ணுடன் கலந்து விதையாயிருக்கின்றன. அங்கே முளைக்கும் தாவரங்களைத்தான் நாம் உண்கிறோம். அவர்களின் எண்ண அலைகள் இன்றும் எம் பிரபஞ்சத்திலே நிறைந்தே இருக்கின்றன. அவற்றைத்தான் எம் மக்களின் எண்ணங்கள் ஈர்க்கின்றன. இப்படிக் காற்றிலும் கடலிலும் விண்ணிலும் நிறைந்து, உணவிலும் நீரிலும் எண்ணத்திலும் எம்மக்களோடும் எம் மண்ணோடும் இரண்டறக்கலந்த மாவீரர்களை எம்மிடம் இருந்து எப்படிப் பிரிப்பது?
உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது, உலகின் அடிப்படை மனித நாகரீகம். அந்த பொது நாகரீகத்தையே எம் மக்கள் இன்று நிலை நிறுத்தியிருக்கிறார்கள். இனியும் நிலை நிறுத்துவார்கள் என்றார்.
து.ரவிகரன்,
வடமாகாணசபை உறுப்பினர்
முல்லைத்தீவு மாவட்டம்.

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சிறீஸ்கந்தராசா ஸ்ரீரஞ்சனின் மீசாலையிலுள்ள இல்லத்தின் மீது நேற்று (27.11.13) அதிகாலை 1.30 அளவில் ஆறு மோட்டார் சைக்கிள்களில் ஆயுதந்தாங்கிய 12க்கும் மேற்பட்ட நபர்களால் நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். இது போன்ற நடவடிக்கைகள் மூலம் இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்பதை அனைவரும் உணர வேண்டும். தமிழ் மக்கள் மீது தொடர்ந்தும் இலங்கை அரசும் அதன் படைகளும் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுமானால் அது பாரிய பின் விழைவுகளை தோற்றுவிக்கும்.
பிரச்சாரப் பிரிவு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
28/11/2013
பிரச்சாரப் பிரிவு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
28/11/2013
ஜெயேந்திரர், விஜயேந்திரர் விடுதலை : சங்கரராமன் மகன் ஆனந்த் அதிர்ச்சி
சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 23 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் புதுச்சேரி அமர்வு நீதிமன்றம் இன்று இந்த மிக மிக பரப்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்

நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் றெக்சீன் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்! பிரேத பரிசோதனையில் அம்பலம்
நெடுந்தீவு பிரதேச சபை தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினருமான டானியல் றெக்சீன் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இவரின் சடலத்தை பிரதே பரிசோதனைக்கு உட்படுத்திய போது சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது.
பிரதே பரிசோதனை சட்டவைத்திய அதிகாரியான சின்னையா சிவரூபன் முன்னிலையில் நடத்தப்பட்டது.
27 நவ., 2013
மாவீரர் நாளினை முன்னிட்டு இன்று யாழ்ப்பாணம் உதயன் பணிமனை வளாகத்தில் நடைபெற்ற மரம் நடுகை நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன், வடமாகாண சபை உறுப்பினர் ஆனல்ட், வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன், சட்ட வைத்திய அதிகாரி எஸ்.சிவரூபன் மற்றும் உதயன் நிறுவனம் சார்பில் எஸ்.அனுராஜ் ஆகியோர் மரங்களை நாட்டி வைத்தனர்.
நன்றி : உதயன்
நன்றி : உதயன்
உரிமைகளுக்காக உயிர் நீத்த மக்களுக்கு சபையில் அஞ்சலி செலுத்திய யோகேஸ்வரன் எம்.பி
போரின் போது உரிமைகளுக்காக போராடிய தமிழர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று அஞ்சலி செலுத்தியது.நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
விதையாய் வீழ்ந்த நம் வீரர்களின் நினைவோடு விடுதலைக்காக மூன்று பெரும் பரிமாணங்களில் செயலாற்ற உறுதி கொள்வோம்: பிரதமர் வி.உருத்திரகுமாரன்
விடுதலை, சுதந்திரம் என்ற உலகப் பெருவிழுமியங்களை தம் இதயத்தில் சுமந்து நின்று களமாடிக் காவியமாகி விட்ட நம் கார்த்திகைப்பூக்களின் நினைவு நாளில் விடுதலையினை வென்றெடுக்க மூன்று பெரும் பரிமாணங்களில் நாம் அனைவரும் செயலாற்ற உறுதி கொள்வோம்
தடைகளை தாண்டி மாவீரர்கள் நினைவாக மரக்கன்றுகளை நாட்டினார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்
யாழ்.குடாநாட்டில் தமிழீழ மாவீரர் தினத்தையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு மாவீரர்கள் நினைவாக மரக்கன்றுகளை இன்றும் நாட்டியுள்ளதுடன், இன்றைய நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் கலந்துகொண்டு மரக்கன்று நாட்டியுள்ளார்.
வவுனியா அட்டமஸ்கட மதகுருவுக்கு எதிராக 12 வயது சிறுவன் ஒருவன் இன்றும்(26) நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
வவுனியா அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தில் சிறுவர் துஸ்பிரயோகம் இடம்பெற்றதாக சிறுவர்கள் வழங்கிய முறைப்பாட்டையடுத்து அதன் முகாமையாளரான விகாராதிபதி கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ். யுவதிகளுடன் கொழும்பில் ரூம் போடும் வங்கியாளர்!
வடமரட்சியில் நெல்லியடி வங்கிக் கிளை முகாமையாளரின் மன்மத லீலைகள் குறித்து கலாசாரம் பேணும் இளைஞர்கள் தளத்துக்கு முறையிட்டு உள்ளார்கள்.
விவசாய கடன் போன்ற கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றமைக்கு பிரதி உபகாரமாக பயனாளி யுவதிகளிடம் இருந்து இவர் செக்ஸ் இலஞ்சம் பெற்று வருகின்றார் என்பதற்கு புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றுடனான ஆதாரங்களும் எமக்குக் கிடைக்கப் பெற்று உள்ளன.
நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் சடலமாக மீட்பு

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினருமான டானியல் றெக்சிசன் ( வயது 47) அவரது வீட்டிலிருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)