சிவாஜி சிலையை இடம் மாற்றலாம்! தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு!
போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி, சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலையை இடமாற்றம் செய்யுமாறு தியாகி சீனிவாசன் கடந்த 2006ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மறைவுக்குப் பின் சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பி.நாகராஜன் என்பவர் இந்த வழக்கை நடத்தி வருகிறார்.
சிவாஜி சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக போக்குவரத்து போலீசார் இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் பதில் மனு அளித்திருந்தனர்.
சிலை இருக்கும் இடத்தை மாற்றக் கூடாது என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.