புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜன., 2014

இலங்கை எம்.பிக்கள் குழு பிரிட்டன் பயணம்! புலம்பெயர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை
பிரிட்டனிலுள்ள புலம்பெயர் இலங்கையர்களையும், அந்நாட்டின் அரசியல் பிரமுகர்களையும் சந்தித்து தற்போதைய இலங்கையின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றம் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேற்று பிரிட்டன் பயணமாகியுள்ளனர்.
இக்குழுவில் அங்கம் வகிக்கும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய இணைப்பாளருமான ஹுனைஸ் பாருக்கும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளார்.
தமது பயணத்திற்கு முன்னர் விமான நிலையத்தில் வைத்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்:
இலங்கை நிலைவரம் தொடர்பில் புலம் பெயர்தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களை தெளிவுபடுத்தும் வகையில் தாங்கள் பிரித்தானியாவுக்கு சென்று 10 தினங்கள் அங்கு தங்கியிருந்து அமைப்புக்கள், துறைசார்ந்தவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பல்வேறு பட்ட விளக்கங்களை வழங்கவுள்ளோம்.
இதன் மூலம் அங்கிருக்கின்ற புலம் பெயர்மக்கள் தெளிவினை பெறுவர் அவர்கள் தொடர்பில் தெரிவிக்கப்படும் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு பதிலையும் நாங்கள் கூறுவோம்.
இல்கையில் நீண்ட ஒரு அழிவின் பின்னர் தற்போது ஏற்பட்டுள்ள சமாதான சூழல், அதன் பின்னரான நிலைவரங்கள் தொடர்பில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள், ஊடகச் செய்திகளின் தன்மை என்பன பற்றியும் நாம் இந்த பயணத்தின் போது விளக்கமளிக்கவுள்ளோம்.
குறிப்பாக பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்கும் சென்று அங்கிருக்கின்ற முக்கிய மக்கள் பிரதிநிதிகளுடன் கருத்தாடல்களை செய்யவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் இதன் போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad