புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜன., 2014

இதுவே ஐநாவில் கொண்டுவரும் கடைசி தீர்மானமாக இருக்கட்டும்!- நாடு கடந்த தமிழீழ எம்.பி.வேண்டுகோள்-விகடன் 
இலங்கை அரசு வேண்டுமானால், பிரச்சினை முடிந்துவிட்டது, ஓய்ந்துவிட்டது, தமிழ் மக்கள் நலமாக இருக்கிறார்கள் என்று வெற்றுச் சொற்களால் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் உண்மையில் ராஜபக்ஷே அரசு, தமிழர்களுக்கு விஷத்தைத் தடவி மருந்து போட்டுக்கொண்டிருக்கிறது.
மேலும் மேலும், தமிழர்களை ரணமாக்கும் விதமாகத்தான் செயல்படுகிறது. சிங்களத் தீவில் தமிழர்கள் படும் அவலத்தை ஊடகங்களும் சமூக செயல்பாட்டாளர்களும் உரக்கச் சொல்லியும், அது உலகத்தின் மனசாட்சியை இன்னும் உலுக்கவே இல்லை.
நாடு கடந்த தமிழீழ அரசின் எம்.பி-யான இராஜலிங்கம் கடந்த வாரம் சென்னை வந்தபோது விகடனுக்கு வழங்கிய செவ்வி
நாடு கடந்த தமிழீழ ஈழ அரசு இன்னும் செயல்படுகிறதா?
மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
2009-ம் ஆண்டு மே மாதம் நடந்த இலங்கை அரசின் இன அழிப்பைத் தொடர்ந்து, இலங்கைத் தமிழருக்கு ஒரு தனி நாடு தேவை என்ற கோரிக்கை வலுத்தது.
இலங்கைக்கு வெளியே வாழும் புலம்பெயர் தமிழர் மத்தியில் பல தமிழ் சங்கங்கள் உருவாகின. இவற்றில் ஒன்றுதான் நாடு கடந்த தமிழீழ அரசு.
2010-ம் ஆண்டு மே மாதம் பல வெளிநாட்டுத் தமிழர்களால் உருவாக்கப்பட்டு, இதன் முதல் தேர்தல் அந்த ஆண்டில் நடைபெற்றது.
ஐக்கிய ராஜ்ஜியம், ஐக்கிய அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், நோர்வே, டென்மார்க், சுவிஸ், நியூசிலாந்து போன்ற 12 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இதன் பிரதம மந்திரியாக விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
ராஜபக்ச தண்டிக்கப்பட வேண்டும்.
தமிழர் பகுதியில் நடக்கும் நில அபகரிப்புகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
வடபகுதியில் நிலைகொண்ட இராணுவம் வெளியேற வேண்டும்.
அங்கு நடைபெறும் இராணுவ ஆட்சி நிறுத்தப்பட வேண்டும்.
இன்னும் முகாம்களில் தங்கி இருக்கும் மக்களை, மீண்டும் அவர்களின் இடங்களில் குடியமர்த்த வேண்டும்.
இதுபோன்ற எமது கோரிக்கைகளை உலகறியச் செய்வதே எமது அரசின் நோக்கம்.
இலங்கைப் பிரச்சினையை வைத்து சிலர் விளம்பரம் தேடிக்கொள்கிறார்களே?
ஆமாம். போர் நடக்கும்போது எம்மக்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்தான் சிங்களவன். எம்மக்கள் குண்டடிப்பட்டு மாண்டு போனதையே இன்னும் எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
ஆனால், இவர்களை வைத்து சிலர் அல்ல, பலர் விளம்பரம் தேடுகிறார்கள்.
போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு செய்யும் பச்சை துரோகத்துக்கு சமமானது இது. இதை சொல்லியும் பயன் இல்லை.
விளம்பரம் தேடுபவர்களே பார்த்து திருந்தினால்தான் உண்டு. இவர்களால் எங்களுக்கு எந்த நன்மையுமே நடக்கப்போவது இல்லை.
இன்னும் ஓரிரு மாதத்தில் ஐ.நா. சபை கூடுவதாக இருக்கிறதே?
எப்போதும் இல்லாத அளவுக்கு கொமன்வெல்த் மாநாட்டுக்குப் பிறகு உலகத்தின் கவனம் இலங்கையின் மீது திரும்பி இருக்கிறது.
தமிழக மக்களும் தமிழக மாணவர்களும் பெருமளவில் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்திய பிறகு, இந்திய அரசு நெருக்கடிக்கு உருவானது.
தமிழகத்தில் இருந்த அரசியல் கட்சிகளும் ஒன்றுகூடி ராஜபக்ச போர்க்குற்றவாளி என அறிவிக்க, குரல் கொடுத்தனர்.
இப்போது ஐ.நா. கூட்டம் நடைபெற இருக்கும் வேளையில், 3-வது முறையாக அமெரிக்க அரசு இலங்கை மீது கொண்டுவரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும்.
அதற்கு இங்குள்ள அரசியல் கட்சிகளும் மக்களும் இன்னும் குரல் கொடுக்க வேண்டும்.
இதுவே ஐ.நா-வில் கொண்டுவரும் கடைசி தீர்மானமாக இருக்க வேண்டும். நம் மக்களைக் கொன்று குவித்த அரக்கனை கூண்டில் ஏற்ற வேண்டும். மக்களின் குரலுக்கு செவிசாய்க்காத அரசுகள்இ மண்ணோடு மண்ணாக மட்கிப்போன வரலாறு தெரியாதவர்கள் அல்ல நம் அரசுகள். 

ad

ad