புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜன., 2014

சிவாஜி சிலையை இடம் மாற்றலாம்! தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு!

போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி, சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலையை இடமாற்றம் செய்யுமாறு தியாகி சீனிவாசன் கடந்த 2006ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மறைவுக்குப் பின் சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பி.நாகராஜன் என்பவர் இந்த வழக்கை நடத்தி வருகிறார்.
சிவாஜி சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக போக்குவரத்து போலீசார் இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் பதில் மனு அளித்திருந்தனர்.
சிலை இருக்கும் இடத்தை மாற்றக் கூடாது என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
சிலையை அகற்றக் கூடாது என தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தினர் பெருநகர காவல் ஆணையர் ஜார்ஜை சந்தித்து கடந்த நவம்பர் மாதம் மனு அளித்தனர்.

வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக கருதி விசாரிக்கவேண்டும் என்று நடிகர் திலகம் சிவாஜி சமூகநல பேரவையின் தலைவர் கே.சந்திரசேகரன் மனு தாக்கல் செய்தார். சிலைகள் எல்லாம் போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. அதுபோல சிவாஜி கணேசன் சிலையும் போக்குவரத்து இடையூறாக இல்லை. சிவாஜி கணேசன் சிலையை அகற்றினால், பொதுமக்களின் மனதை புண்படுத்தும். எனவே சிலையை அகற்றக்கோரிய மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று மனுவில் கூறப்பட்டது.
இந்த மனுக்கள் தொடர்பான விசாரணை சென்னை கோர்ட்டில் நடைபெற்றது. நீபதிகள் அக்னி ஹோத்ரி மற்றும் சசிதரன் அமர்வு முன் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது,  போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சிலையை மாற்றலாம் என உத்தரவிட்டுள்ளது.

ad

ad