-
5 பிப்., 2014
இலங்கையின் 66வது சுதந்திர தினம் இன்று! பிரச்சினைகளுக்கு தீர்வு வராதா என்ற ஏக்கத்துடன் தமிழ் மக்கள்
ராஜீவ் கொலை வழக்கு: மூவரின் தூக்குத் தண்டனையை குறைக்க மத்திய அரசு எதிர்ப்பு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மூன்று தமிழரின் தூக்கு தண்டனையை இரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ராஜீவ் வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று தமிழருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் ஜனாதிபதிக்கு கருணை மனுவை அனுப்பி இருந்தனர்.
காங்கிரஸை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும்: மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
மதிமுகவின் பொதுக் குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவன,
யாழ் மற்றும் வெலிக்கடை சிறையிலிருந்து 1242 கைதிகள் விடுதலை
இலங்கையின் 66வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ், யாழ். சிறைச்சாலையில் தண்டப்பணம் செலுத்த முடியாததால் சிறை தண்டனை அனுபவித்து வந்த 9 பேர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறு குற்றங்கள் புரிந்து தண்டப்பணத்தை கட்ட முடியாததனால் சிறைத்தண்டனை பெற்ற ஒரு பெண் கைதி உட்பட 9 கைதிகளை
4 பிப்., 2014
ஜே.வி.பியின் பிரதேச சபை உறுப்பினர் ஐ.தே.கவில் இணைவு - ஜே.வி.பிக்கு கொள்கை ரீதியான மாற்றம் தேவை
ஜே.வி.பியின் புதிய தலைவராக அனுரகுமார திஸாநாயக்க நேற்று தெரிவு செய்யப்பட்ட நிலையில், அந்த கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார்.களுத்துறை - மத்துகம பிரதேச சபையில் அங்கம் வகிக்கும்
இராணுவத்தினரை சம்பந்தன் வெளியேற சொல்கிறார்! மீள்குடியேற்ற அமைச்சர் குற்றச்சாட்டு
வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அப்பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் அரசிற்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றார். இவ்வாறு மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன் குற்றம்சாட்டியுள்ளார்.
திரையிடப்பட்ட பஸ்களுக்குள் காதல் ஜோடிகள்! சாரதி, நடத்துனர் கைது
ஜன்னல் கண்ணாடிகளுக்கு திரையிடப்பட்ட பஸ்வண்டிகளை பாடசாலை மாணவ, மாணவிகளுக்கும் இளம் காதலர்களுக்கும் காதல் சல்லாபம் புரிய வசதியாக வாடகைக்கு விடும் பஸ்வண்டியின் சாரதி, நடத்துனரை கைது செய்த தம்புள்ள பொலிஸார் இரண்டு காதல் ஜோடிகளையும் கைது செய்துள்ளனர்.
டுபாயிலிருந்து சுவீடன் - ஸ்டோக்ஹோம் நோக்கி சென்ற விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டிய இலங்கை பயணி கைது
டுபாயிலிருந்து சுவீடன் - ஸ்டோக்ஹோம் நோக்கி சென்ற விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவர், தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாக கூறி அச்சுறுத்தியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணித்த இந்த இலங்கையர்,
3 பிப்., 2014
வடமாகாணசபைத் தீர்மானங்களுக்கு சிறிலங்கா அதிபரே பொறுப்பு – முதல்வர் விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு |
போர்க்குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணை கோரி வடக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவே காரணம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)