தமிழகத்தில் 72.83 % வாக்குகள் பதிவு : பிரவீண்குமார் அறிவிப்பு
தமிழகத்தில் இன்று நடைபெற்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவில் 72.83 % வாக்குகள் பதிவாகியுள்ளன.தமிழகத்தின் 39 தொகுதிகளில் இன்று மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7மணிக்கு துவங்கிய -
24 ஏப்., 2014
தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கலிங்கப்பட்டியில் வாக்களித்துவிட்டு வெளியே வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசும்போது, ''உலகத்தின் தலை சிறந்த ஜனநாயக நாடுகளில் ஒன்று இந்தியா. 16வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான இந்த வாக்குப் பதிவு, இன்று தமிழகத்தில் நடைபெறுகிறது. 5 கோடியே 37 இலட்சத்து 33 ஆயிரம் வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்குப் பதிவு செய்கிறார்கள். நான் என்னுடைய பிறந்த ஊராகிய கலிங்கப்
- மக்களவை தேர்தலில் மத்திய சென்னை தொகுதி ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தனது வாக்கை பதிவு செய்தார். அவரது தோழி சசிகலாவும் உடன் வந்து வாக்களித்தார். முதல்வர் வருகையை முன்னிட்டு, கல்லூரி வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள சாரதா பள்ளி வாக்கு சாவடியில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வாக்குப்பதிவு செய்தார்.
அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், தயாளுஅம்மாள், மு.க.தமிழரசு, அமிர்தம், செல்வம், செல்வி, அவரது மகள் எழிலரசி ஆகியோரும் வந்து அதே வாக்கு சாவடியில் வாக்களித்தனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விருதுநகர் தொகுதி வேட்பாளர் வைகோ, கலிக்கப்பட்டியில் வாக்களித்தார். அவருடன் அவர் மகன் வையாபுரியும் சென்று வாக்களித்தார்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை கருத்துச் சொல்ல விரும்பவில்லை: ஜெயலலிதா பேட்டி
சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் ஜெயலலிதா வாக்களித்தார். அவருடன் அவரது தோழி சசிகலாவும் வந்திருந்தார்.
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை கருத்துச் சொல்ல விரும்பவில்லை. வாக்குப்பதிவு அமைதியாக, முறையாக நடைபெற தேர்தல் ஆணையத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
'வெற்றி எங்களுக்கு': வாக்களித்த பின்னர் மு.க.அழகிரி
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரையில் தனது இல்லத்துக்கு அருகே உள்ள முத்துப்பட்டி அரசு பள்ளியில் காலை 10.30 மணிக்கு வாக்களித்தார். அவரது குடும்பத்தினரும் அவருடன் வந்து வாக்களித்தனர்.
வாக்களித்துவிட்டு வந்த அவரை செய்தியாளர்கள் சூழ்ந்தனர். அப்போது அவர், 'வெற்றி எங்களுக்கு' என்று மட்டும் கூறிவிட்டு சென்றார்.
ஜெயலலிதா சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்
கலைஞர் வாக்களித்தார்
திமுக தலைவர் கலைஞர் சென்னை கோபாலபுரத்தில் உள்ள சாரதா பள்ளி வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தனது தாயார் தயாளு அம்மாள், மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோருடன் சென்று சென்னை கோபாலபுரத்தில் உள்ள சாரதா பள்ளி வாக்குச் சாவடியில் வாக்கினை பதிவு செய்தார்.
அதிமுகவினர் பணம் விநியோகம் என புகார்: டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்
தஞ்சை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு ஒன்றை தாக்கல்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)