ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜேர்மன் விஜயத்தினை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
ஆசியா பசுபிக் ஜேர்மன் வணிக சங்கமும், யேர்மனியில் உள்ள இலங்கைத் தூதரகமும் இணைந்து நடாத்திய " இலங்கை - ஜேர்மன் வணிக பேரவை மாநாட்டுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்றிருந்திருந்தார்.
பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழரிடையே 12 வருட காலமாக சமூக தொண்டாற்றி வரும் தமிழ் சமூக நடுவம் நடத்துகின்ற பூமாலை விழா எதிர்வரும் சனியன்று நடைபெறுகிறது அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றனர் .அங்கு பல காலமாக சமூக பணி ஆற்றி வரும் புங்குடுதீவை சேர்ந்த சிவலைபிட்டி சனசமூக நிலைய வழிகாட்டியான அமரர் ஏரம்பு சிவலிங்கம் அவர்களின் புதல்வி சசி நவரத்தினம் அவர்களின் தீபம் தொலைக்காட்சிக்கான செவ்வியை இங்கே காணலாம்
பிரான்சில் இனம்தெரியாதோர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரஞ்சுக் கிளைப் பொறுப்பாளர் பரமலிங்கம் படுகாயமடைந்தள்ளார்.
ஈழத்தின் மிகப்பிரபல்யமான நாடகவியலாளரும், தமிழீழ தேசிய தலைவரால் மதிப்பளிக்கப்பட்டவருமாகிய "அரசையா"என எல்லோராலும் அழைக்கப்பட்ட "மாமனிதர் திருநாவுக்கரசு"(அரசையா) காலமாகிவிட்டார். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைக! அன்னாரின் இழப்பால் துயருறும் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்