புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

18 பிப்., 2016

முல்லைத்தீவு நீதிமன்றம் அதிரடி உத்தரவு: ராணுவத்திடம் சரணடைந்தவர்கள் விபரம் தேவை

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இலங்கை அரச படைகளிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான விபரங்களை
இராணுவத்தின் 58ஆவது படையணி நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று முல்லை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இறுதியுத்தத்தில் சரணடைந்தவர்கள் தொடர்பான தகவல்கள் 58ஆவது படையணியின் முகாமில் இருப்பதாகவும் இதன் காரணமாகவே இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று அரசு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் சரணடைந்தவர்கள் குறித்து எந்தவொரு தகவலும் வெளிவராத நிலைமை காணப்படுகின்றது.
இதேவேளை வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தன்னுடைய கணவரான எழிலன் எனப்படும் சசிதரன் தொடர்பில் காணாமல் போகச் செய்யப்பட்மை குறித்தத வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெற்றுவருகிறது. இதேவேளை இராணுவத்தின் சார்பில் ஆஜரான மேஜர் ஜெனரல் சாணக்ய குணவர்த்தன சரணடைந்தவர்கள் தொடர்பான பதிவுகள் எதுவும் 58ஆவது படையணியிடம் இல்லை என கூறியுள்ளார். யுத்தத்தின்போது சரணடைந்த அனைவரது பெயர் விபரங்களும் 58ஆவது படையணியிடம் உள்ளதாக தெரிவித்த சாணக்கிய குணர்வத்தன வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பான விபரம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சரணடைந்தவர்கள் தொடர்பான ஆவேணத்தை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட முல்லை மாவட்ட நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுதீன் வழக்கை எதிர்வரும் 19ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.