புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 பிப்., 2016

40 வருடம் ஜேர்மனியில் இருந்தவர் யாழ் வந்து சிறுமியை சிதைக்க முற்பட்டார் !

தமிழர்களின் மனித உரிமைக்காக புலம்பெயர் தேசங்களில் போராடி வந்ததாக கருதப்படும் ஜேர்மனியில் 40 வருடங்கள் வசித்து
வந்த நபர் ஒருவர் யாழ்ப்பாணம் வந்து 9 வயதுச் சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ய முற்பட்ட போது யாழ் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். குறித்த சிறுமியை யாழ் நகர்ப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்க முற்பட்டார் எனவும். சிறுமி தப்பிச் சென்று தனது தாயிடம் இது பற்றி கூறிய போது தாயார் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இன் நபர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அறியப்படுகிறது.
57 வயதான இன் நபர் புலம் பெயர்ந்து ஜேர்மனி சென்று 40 வருடங்களாக அங்கு வசித்து வந்துள்ளது தெரிய.வந்துள்ளது. புலம்பெயர் தேசத்தில் ராணுவ அடக்கு முறைக்கு எதிராக போராடி வந்த நபர்களில் இவரும் ஒருவர் என்று தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான காமுகர்கள் தனது முகத்தை மறைப்பதற்காக தமிழர்களின் நலன்களில் அக்கறையுடன் செயற்படுவது போல் காட்டி தம்மை உருமறைப்புச் செய்து வருகின்றனர். 

ad

ad