-

26 செப்., 2019

திருடச் சென்றவர் கிணற்றில் விழுந்து மரணம்

யாழ்ப்பாண நகரில் உள்ள வீடொன்றில், திருடச் சென்றார் என சந்தேகிக்கப்படும் ஒருவர், கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். அவர் கிணற்றுக்குள் விழுந்த சத்தம் கேட்டதையடுத்து, அங்கு சென்று பார்த்த வீட்டு உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

புலிகளுக்கு பயந்து கோழை போல ஒளிந்தவர் கோத்தா!

விடுதலைப் புலிகளுடனான போரின்போது கோத்தாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறி ஒரு கோழை போல் மறைந்திருந்தார் என்றும், அவரது சகோதரர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்தே நாடு திரும்பினார் என்றும் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் துரோகத்தனமே இனப்படுகொலையானது; ஐநாவில் வேல்முருகன்


சுவிற்சர்லாந்து, தமிழ்நாடு

ஐரோப்பிய ஒன்றியத்தின் துரோகச் செயலே தமிழினப்படுகொலைக்கு காரணமானது என தமிழக வாழவுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் சுய நிர்ணய உரிமை மறுக்கப்பட முடியாது; ஐ.நா அவையில் விவேகானந்தன்

தமிழீழ விடுதலையை நோக்கிய தமிழர்களின் சுய நிர்ணய உரிமை மறுக்கப்பட முடியாது. தமிழீழ விடுதலைக்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் மே பதினேழு இயக்கம்vவலியுறுத்தியுள்ளது.

24 செப்., 2019

பிக்குகளின் அடாவடி - தலைகுனிவு என்கிறார் ரணில்


“ விகாராதிபதியின் உடலை வைத்து பௌத்த பிக்குகள் சிலர் வடக்கில் அரசியல் நாடகம் நடத்தியுள்ளனர் என்றும், நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறிய இவர்களின் அடாவடியினால், நாம் வெட்கித் தலைகுனிகின்றோம் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

23 செப்., 2019

வடக்கு அதிபர்களுக்கு ஆளுநர் கடும் உத்தரவு!

வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளில் மாணவர்கள் அனுமதியின் போது, கல்வியமைச்சின் சுற்றறிக்கையை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் ஒவ்வொரு வகுப்பு பிரிவிலும் எக்காரணம் கொண்டும் 35 மாணவர்களுக்கு மேல் இணைத்துக் கொள்ளக்கூடாது எனவும்

சட்டத்தரணிகள், பூசகரை தாக்கிய பிக்குகள்


முல்லைத்தீவில், நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்த சமயத்தில், பௌத்த பிக்குகளால் சட்டத்தரணிகள் உள்ளிட்ட சிலர் தாக்கப்பட்டுள்ளனர். தாக்கப்பட்ட மூவர் வைத்தியசாலையில்

பொய் சொல்கிறார் ஜனாதிபதி

சொலிஸிட்டர் ஜெனரல் டில்ருக்‌ஷி டயஸ் விக்கிரமசிங்கவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்குமாறு தான் ஒருபோதும் பரிந்துரை செய்யவில்லை என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் இரகசிய வாக்கெடுப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை வரும் வியாழக்கிழமை கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

22 செப்., 2019

பொதுஜன பெரமுனவில் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சே.ஜெயானந்தமூர்த்தி இன்று, மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான பொது ஜன பெரமுன கட்சியில் இணைத்துள்ளார் என, அந்தக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்
இன்று 22ம் திகதி மதியம் 1 மணியளவில்

கம்போடியாவில் தொடங்கியது தமிழ்க் கவிஞர்கள் மாநாடு

ம்போடியா நாட்டில் உலக தமிழ் கவிஞர்கள் மாநாடு ,இன்று கோலாகலமாக தொடங்கியது.
கம்போடியா நாட்டின் சியம்ரீப் மாநில கலாசார மற்றும் பண்பாட்டுத்துறையுடன் இணைந்து உலகத் தமிழ் கவிஞர்களின் 2 நாள் மாநாடு 21, 22ம் திக

ரணில் - சஜித் இன்று முக்கிய சந்திப்பு

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது.

20ஐ நிறைவேற்றுங்கள் - சுமந்திரன் சவால்

ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பிற்பாடு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பீர்களெனின் அதற்கு முன்கூட்டிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் இப்போதே பாராளுமன்றத்தில் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுங்கள் என்று சவால் விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

21 செப்., 2019

அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்

அவசர தேவைக்கா

கனடா ஸ்காபரோவில் தமிழ் இளைஞன் சாரங்கன் சுட்டுக்கொலை!

கனடா- ரொறன்டோ, ஸ்காபரோ பகுதியில் வியாழக்கிழமை இரவு தமிழ் இளைஞன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். Scarborough வில், Middlefield Road இற்கும் McNicoll Avenue வுக்கும் இடைப்பட்ட பகுதியில், வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

கோத்தாவுக்கு எதிராக விஷேட விசாரணைகள்!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, 2005 ஆம் ஆண்டு அமெரிக்க பிரஜையாக இருந்தபோது ஹம்பாந்தோட்டை - மெதமுலன வாக்காளர் இடாப்பில் பெயர் உள்வாங்கப்பட்ட விதம், குறித்த ஆண்டு

இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா -வடமாகாண ஆளுநர் சந்திப்பு

3 ஆவது இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று (20) பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.

20 செப்., 2019

ஐக்கிய தேசிய கட்சி அழிந்துவிட்டது-மஹிந்த ராஜபக்

தேர்தல்கள் ஆணையகம் ஜனாதிபதி தேர்தலை அறிவித்துள்ள நிலையில் ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதற்காக நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் மோசடி என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

திரு. பொன்னையா தனபாலசிங்கம் அவர்களுக்கு மாமனிதர் என்ற அதியுயர் தேசியவிருது

தமிழீழ விடுதலைப் புலிகள் - பெல்ஜியம் கிளையின் நீண்டகாலப் பொறுப்பாளர் திரு. பொன்னையா தனபாலசிங்கம் அவர்கள், கடந்த 16.09.2019 அன்று உடல் நலம் பாதிப்படைந்த நிலையில் சாவடைந்தார் என்ற செய்தி எம் நெஞ்சங்களில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணநீதிமன்றில் பொலிஸ் அதிகாரியின் கன்னத்தில் அறைந்த கைதி

யாழ்ப்பாண நீதிமன்றக் கட்டடத்துக்குள் பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கிய, சந்தேகநபருக்கு மீது மற்றொரு வழக்கைத் தாக்கல் செய்ய கோப்பாய் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்காக நேற்றுமுன்தினம் பிற்பகல்

ad

ad