![]() நேற்று மாலை நிலவிய சீரற்ற வானிலை காரணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணித்த 3 விமானங்கள், அங்கு தரையிறங்க முடியாத நிலையில் மத்தள விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. மாலைதீவிலிருந்து பயணித்த, ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 116 என்ற விமானமும், சென்னையில் இருந்து பயணித்த யூ.எல். 128 என்ற விமானமும் மற்றுமொரு விமானமும் மத்தளவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. |
-
26 ஏப்., 2023
கட்டுநாயக்கவில் தரையிறங்க முடியாமல் மத்தளவுக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்
கொடிகாமத்தில் விபத்து பொலிஸ் பலி! - மற்றொருவர் படுகாயம்!
![]() கொடிகாமம்- எருவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் |
முழு முடக்கப் போராட்டம் வெற்றி! - நன்றி தெரிவித்து அரசியல் கட்சிகள் அறிக்கை
![]() வடக்கு - கிழக்கு மாகாணங்களில் நேற்று முன்னெடுக்கப்பட்ட முழுமுடக்கப் போராட்டம் முழுமையான வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த, தமிழ்த் தேசியப் பரப்பில் அரசியல் பணியாற்றி வரும் ஏழு கட்சிகளும் கூட்டாக தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளன. இதுகுறித்து அவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் விபரம் வருமாறு |
பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல்! -திருத்தச் சட்டமூலத்தை சமர்ப்பித்தார் சுமந்திரன்.
![]() பழைய தேர்தல் முறையில் மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்தக் கூடியவாறான தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனிநபர் பிரேரணையாக சபையில் சமர்ப்பித்தார் |
25 ஏப்., 2023
ஹர்த்தாலுக்கு வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு!
![]() இன்று வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு, வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், பூரண ஆதரவு வழங்கியுள்ளது |
வடக்கு, கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால்!
![]() வடக்கு, கிழக்கில் அரசாங்கம் முன்னெடுக்கும் அத்துமீறல்கள், பௌத்த மயமாக்கல் நடவடிக்கை, புதிய பயங்கரவாத திருத்தச் சட்டம் என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் கட்சிகள் விடுத்துள்ள பொது கதவடைப்பிற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவினை வழங்கியுள்ளனர் |
உக்ரைனில் தமக்குள்ளே மோதிக்கொள்ளும் ரஷ்ய படைகள்
யேர்மனியில் மகிழுந்தை மோதித்தள்ளியது தொடருந்து: மூவர் பலி
KKRvCSK: முன்னிலையில் சென்னை! - `6 6 6 6 4 1 4 1 6 4' சளைக்காமல் சண்டை செய்த ரஹானே-துபே கூட்டணி!
12 ஓவர்கள் முடிய ஒரு விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் என்ற நிலையில் சி.எஸ்.கே. ஈடன் கார்டனின் இந்த நல்ல பேட்டிங் ட்ராக்கிற்கும் சற்றே
மத போதகர் பேச்சால் 'இயேசுவை சந்திக்க' பட்டினி கிடந்து இறந்தார்களா மக்கள்? கென்யாவில் தோண்டத் தோண்ட உடல்கள்
ஒரே ஒரு போட்டிதான்! சென்னை அணி செய்த 6 சிறப்பான சம்பவங்கள்!
24 ஏப்., 2023
வடக்கு கிழக்கு நாளை முடக்கம்
![]() பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நீக்கக் கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் நாளை இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு பல அரசியல் கட்சிகள் மற்றும் வர்த்தக சங்கங்கள் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன |
யாழ்ப்பாணத்தில் நடிகர் திலகத்தின் நூல் வெளியீட்டு விழாவில் குழப்பம் விளைவித்த பெண்!
![]() நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழா யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிலையில், தன்னை ஏற்பாட்டாளர் எனக் கூறிய பெண் ஒருவர் ஊடகங்களை வெளியேறுமாறு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது |
நெடுந்தீவில் கொல்லப்பட்ட கணவன், மனைவி சடலங்கள் ஒப்படைப்பு!
நெடுந்தீவில் சனிக்கிழமை படுகொலை செய்யப்பட்ட ஐந்து பேரில் நாகநாதி பாலசிங்கம் மற்றும் அவரது மனைவியான பாலசிங்கம் பூமணி ஆகியோரது சடலங்கள் உடல்கூற்று பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இவர்களது சடலங்கள் கொக்குவில் பிரம்படி ஒழுங்கையிலுள்ள உறவினர் ஒருவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன. |
நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கைது!
![]() முறையற்ற வகையில் பரம்பரை காணியை மோசடியான முறையில் தனது பெயருக்கு உரிமம் மாற்றிய குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார் |
23 ஏப்., 2023
14 வயது சிறுமி பாலியல் வல்லுறவு - 21 வயது காதலன் கைது!
![]() யாழ்ப்பாணத்தில் 14 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பாக அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், கெருடாவில் பகுதியில் வசிக்கும் 14 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய 21 வயதான சிறுமியின் காதலனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் |
யாழ். பல்கலையில் இன்று சிவாஜி குறித்த ஆய்வு நூல் வெளியீடு - ராம்குமார் வருகை.
![]() நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் உள்ளிட்ட குழுவினர் நேற்று பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். |
நெடுந்தீவில் நடந்தது என்ன? - கும்பாபிஷேகத்துக்குச் சென்றவர்கள் கொன்று போடப்பட்டது ஏன்?
![]() யாழ்ப்பாணம்- நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டு காயங்களுடன் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஐவர் சடலங்களாக மீட்கப்பட்டமை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன |
22 ஏப்., 2023
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து மகாநாயக்கர்கள் கடிதம்!
![]() உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பாக, மகாநாயக்க தேரர்கள் கடிதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர் |