விசாரணைக்கு முன்னிலையாகிறார் சஜித் பிரேமதாச! [Thursday 2025-09-04 10:00] |
![]() எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமாகிய சஜித் பிரேமதாச இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய அவர் அழைக்கப்பட்டுள்ளார் |
-
4 செப்., 2025
யாழ். நீதிபதிகள் மூவருக்கு பதவி உயர்வு! [Thursday 2025-09-04 10:00] |
![]() யாழ்ப்பாண நீதிமன்றங்களில் பணியாற்றிய, நீதிபதிகள் மூவருக்கு மேல்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் மாவட்ட நீதிபதிகளாகவும் நீதிவான் நீதிமன்ற நீதிபதிகளாகவும் கடமையாற்றிய நீதிபதிகளான A.A. ஆனந்தராஜா , அந்தோனிப்பிள்ளை யூட்சன் மற்றும் கஜநிதிபாலன் ஆகியோர் மேல் நீதின்ற நீதிபதிகளாக ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கா அவர்களால் நியமிக்கப்பட்ட உள்ளனர். |
1 செப்., 2025
மயிலிட்டியில் ஒன்று கூடிய காணி உரிமையாளர்கள், ஊடகவியலாளர்கள் பொலிசாரால் விரட்டியடிப்பு! ![]() [Monday 2025-09-01 16:00] |
![]() யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியில் இன்று காலை ஒன்றுகூடிய காணி உரிமையாளர்களையும் அதனை செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களையும் பொலிஸார் விரட்டியடித்தனர். |
31 ஆக., 2025
தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள் - இன்றும் 12 அடையாளம்! [Sunday 2025-08-31 18:00] |
![]() செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று (31) புதிதாக 12 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் 10 மனித எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன |
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்று 39 ஆவது நாளாக அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது. இதுவரையில் 209 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டு 191 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
![]() |
பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டு வெளியேறியவர் சுட்டுக்கொலை! [Sunday 2025-08-31 18:00] |
![]() வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றொருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். காலை 10.30 மணியளவில் வேவா வீதி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காரில் வந்த ஒரு குழு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பின்னர் அவர்கள் கூர்மையான ஆயுதங்களால் இருவரையும் தாக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். |
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளான ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றொருவர் காயங்களுடன் தப்பினார். புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர்கள் வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் நடந்து வரும் மேல் நீதிமன்ற வழக்கு தொடர்பாக கையெழுத்திட்ட பிறகு திரும்பி வந்துள்ளனர். இறந்தவருக்கு செப்டம்பர் 9 ஆம் திகதி நீதிமன்றத் தீர்ப்பு வரவிருந்தது. வென்னப்புவ பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் |
30 ஆக., 2025
அடுத்த குறி மைத்திரியும் கோட்டாவும்! [Saturday 2025-08-30 16:00] |
![]() முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரால் பொதுச் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய பல சம்பவங்கள் தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்தில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது |
விசேட உரை நிகழ்த்தவுள்ள ரணில்! [Saturday 2025-08-30 16:00] |
![]() முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 6 ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். கட்சியின் மாநாடு எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி இந்த விசேட உரையினை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது |
செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டி கையெழுத்துப் போராட்டம்! [Saturday 2025-08-30 16:00] |
![]() செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டி தமிழ் தேசிய கட்சிகளும் பொது அமைப்புகளும் ஒன்றிணைந்து கையெழுத்துப் போராட்டம் ஒன்றினை வடக்கு கிழக்குத் தழுவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கும், பாதுகாக்கும் சபைக்கும் அனுப்புவதற்காக இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்ட வருகின்றது. இந்த போராட்டமானத்தின் பகுதி வேலைத்திட்டம் சனிக்கிழமை (30) நவாலி மற்றும் மானிப்பாய் பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டது |
யாழ்ப்பாணம், மட்டக்களப்பில் இன்று பாரிய பேரணிகள்! [Saturday 2025-08-30 07:00] |
![]() சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று (30) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும் கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன |
செம்மணியில் இதுவரை 187 எலும்புக்கூடுகள் அடையாளம்- நேற்றும் 10! [Saturday 2025-08-30 07:00] |
செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 37ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது. |
28 ஆக., 2025
ஆளுநர்களின் நிர்வாகத்தை விட அரசியல்வாதிகளின் நிர்வாகம் 100 வீதம் சிறந்தது! [Thursday 2025-08-28 19:00] |
![]() எல்லை நிர்ணய குழுவொன்றை மீண்டும் நியமித்தால் மாகாண சபைத் தேர்தலை இன்னும் மூன்று ஆண்டுகளுக்கும் நடத்த முடியாத நிலை ஏற்படும். அரச அதிகாரிகள் மற்றும் மாகாண ஆளுநர்களின் நிர்வாகத்தை காட்டிலும் அரசியல்வாதிகளின் நிர்வாகம் நூற்றுக்கு நூறு சதவீதம் சிறந்தது. தேர்தலை பிற்போடுவதற்காகவே எல்லை நிர்ணய குழு நியமிக்கப்படும். தேர்தலை பிற்போட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்கள் குழுவை சவாலுக்குட்படுத்துவார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார் |
தம்பிலுவில் மயானத்தில் மீண்டும் அகழ்வு! [Thursday 2025-08-28 19:00] |
![]() கருணா -பிள்ளையான் குழு முக்கியஸ்தர் இனிய பாரதியின் மற்றொரு சகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று மாலை அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் மீண்டும் 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன |
செம்மணியில் இன்று மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்! ![]() [Thursday 2025-08-28 19:00] |
![]() யாழ்ப்பாணம் செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 177 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 164 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. |
ஜனாதிபதி அனுரவின் உள்நாட்டுப் பயண விபரங்களை வெளியிட மறுப்பு! [Thursday 2025-08-28 19:00] |
![]() ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் உள்நாட்டு பயணம் குறித்த தகவல்களை வெளியிட ஜனாதிபதி செயலகம் மறுத்துவிட்டது. தகவல் அறியும் உரிமைகோரிக்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் பதிலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜினாத் பிரேமரத்னவால் ஆகஸ்ட் 4 ஆம் திகதி கேட்கப்பட்ட கேள்விகள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 5(1)(b)(i) இன் கீழ் ஆகஸ்ட் 27 ஆம் திகதி முறையாக நிராகரிக்கப்பட்டது |
ரணிலுக்காக எந்த இராஜதந்திரியும் வரவில்லை! [Thursday 2025-08-28 06:00] |
![]() முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பாக எந்தவொரு இராஜதந்திரியோ அல்லது இராஜதந்திர நிறுவனமோ எவ்வித நிலைப்பாட்டையும் வெளியிடவில்லை என சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். |
நயினாதீவு, பூநகரி, மணல்காடு, ஆழியவளைக்கு மேலாக சூரியன் இன்று உச்சம்! [Thursday 2025-08-28 06:00] |
![]() சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதியில் இருந்து செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கிணங்க இன்று நண்பகல் 12.11 அளவில் நயினாதீவு, பூநகரி, மணல்காடு மற்றும் ஆழியவளை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. |
26 ஆக., 2025
செம்மணி குறித்த சர்வதேச விசாரணை கோரி 29ஆம் திகதி கையெழுத்துப் போராட்டம்! [Tuesday 2025-08-26 07:00] |
![]() செம்மணி மனிதப் புதைகுழிக்குச் சர்வதேச விசாரணை கோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 29 ஆம் திகதி கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் நேற்று நடத்திய கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது |
ஒருகட்சி ஆட்சிமுறையை ஏற்படுத்த என்பிபி அரசு முயற்சி! [Tuesday 2025-08-26 07:00] |
![]() நாட்டில் நடைமுறையிலுள்ள பல கட்சி ஆட்சி முறைமையை ஒழித்து ஒரு கட்சி ஆட்சியை நிலைநிறுத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசாங்கத்தின் இந்த சர்வாதிகார போக்கினை தடுப்பதற்காகவே இன்று எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்தமைக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நன்றி கூறுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். |
பிள்ளையானின் சகாக்கள் தொடர்ந்து கைது- கிரானில் சிக்கினார் சின்னத்தம்பி! [Tuesday 2025-08-26 07:00] |
![]() மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் பிள்ளையானின் சகாவான சின்னத்தம்பி என அழைக்கப்படும் பூபாலப்பிள்ளை என்பரை நேற்று ஞாயிற்றுக்கிழமை குற்ற விசாரணைப் பிரிவு கைது செய்துள்ளது. |