![]() விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இந்தியாவில் இருந்து நாமே மீட்டோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார் |
-
29 செப்., 2021
புலிகளின் தலைவரை காப்பாற்றியது நாங்கள் தான்! - என்கிறார் சிவாஜிலிங்கம்.
வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு நள்ளிரவு முதல் புதிய நடைமுறை!
![]() வெளிநாடுகளிலிருந்து இருந்து இலங்கை வருபவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தியிருந்தால், விமான நிலையத்தில் பிசிஆர் பரிசோதனைக்கு முகம் கொடுக்க தேவையில்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது |
ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை ரத்து செய்யுமாறும் கூட்டமைப்பு கோரிக்கை!
![]() சிறுபான்மை மக்களின் நீண்டகால உரிமைகளை பெற்றுக்கொள்ளும் ரீதியில் அரசாங்கத்திற்கு அழுத்தங்கொடுக்க ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை நீக்குமாறு இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழுவிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர் |
28 செப்., 2021
உள்ளக விவகாரங்களில் சர்வதேச நிறுவனங்களுக்கு இடமில்லை!
உள்ளக விவகாரங்களில் சர்வதேச நிறுவனங்களுக்கு இடமில்லை! [Tuesday 2021-09-28 05:00] |
![]() உள்ளக விவகாரங்களில் சர்வதேச நிறுவனங்கள் தலையிடுவது அரசியலமைப்பிற்கு முரணாக அமைவதுடன், அரசியல் கட்டமைப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். |
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்- இறக்குமதி செய்யவும் அனுமதி!
![]() ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி தொகையை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. உள்நாட்டு சந்தையில் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட அரிசி தட்டுப்பாட்டை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது |
3 மாதங்களுக்குப் பின்னர் ஆயிரத்தை விட குறைந்தது தொற்று எண்ணிக்கை!
![]() நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்று இனங்காணப்பட்ட இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 514,592 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. |
சந்திப்புகளை தொடங்கியது ஐரோப்பிய ஒன்றிய குழு! [Tuesday 2021-09-28 05:00]
![]() இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைத் தொடர்ந்து வழங்குவதா ? இல்லையா? என்பது பற்றிய மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக வந்துள்ள ஐவரடங்கிய ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, வர்த்தகத்துறைசார் பிரதிநிதிகளுடனான சந்திப்புடன் நேற்று தமது பணிகளை ஆரம்பித்திருப்பதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுகீஸ்வர குணரத்ன தெரிவித்தார். |
25 செப்., 2021
75 சதவீதமான மாணவர்கள் உயர்தரத்துக்கு தகுதி!
![]() நாடளாவிய ரீதியில் பாடசாலை ஊடாக மற்றும் தனிப்பட்ட ரீதியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய 6 இலட்சத்து 22,351 பரீட்சார்த்திகளில் 2 இலட்சத்து 36,053 பேர் அதாவது 75 சதவீதமானோர் (நுண்கலைப்பிரிவு மாணவர்கள் தவிர) உயர்தரம் செல்ல தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார் |
எரிபொருள் கொள்வனவுக்கு இந்தியாவிடம் 500 மில்லியன் டொலர் கடன் கேட்கிறது அரசு!
தமிழ் எம்.பிக்களை ஒருங்கிணைக்க முயற்சி
24 செப்., 2021
திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய கஜேந்திரன் கைது
![]() நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முற்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் |
23 செப்., 2021
சர்வதேச ஒத்துழைப்பைக் கோருகிறார் ஜனாதிபதி கோட்டா!
![]() கொவிட் தொற்றினால் நாடு மாத்திரமல்ல எமது பொருளாதாரமும் முடங்கிப் போயுள்ளது. சர்வதேச ஒத்துழைப்புகள் இலங்கைக்கு கிடைக்க வேண்டும் என ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்தார் |
ஜனாதிபதி கோட்டாவுக்கு எதிராக ஐ.நா முன்பாக ஆர்ப்பாட்டம்
![]() அமெரிக்காவில் கோட்டாபய ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நேற்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றியிருந்தார். இந்த நிலையில் மேற்படி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளதுடன், ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகளை கண்டறியுமாறும், அரசியல் எதிரிகளை அடக்குவதை உடனடியாக நிறுத்துமாறும் ஆர்ப்பாட்டகாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் |
22 செப்., 2021
வல்வை நகரசபைத் தலைவர் தெரிவு இன்று!
![]() வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு இன்று காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபை தலைவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கோணலிங்கம் கருணானந்தராசா அண்மையில் கோவிட்-19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் புதிய தலைவர் தெரிவு இடம்பெறவுள்ளது |
கொழும்பு சிறையில் தமிழ் இளைஞர்களுக்கு பாலியல் சித்திரவதை!
![]() பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 12 தமிழ் இளைஞர்கள் கொழும்பு மறியல் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் நிர்வாணமாக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி.யான செல்வராசா கஜேந்திரன் சபையில் குற்றஞ்சாட்டினார் |
17 இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் வெற்றி!
![]() கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய வம்சாவளி வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஒன்ராறியோவின் ஓக்வில் பகுதியில் அனிதா ஆந்த் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். வாட்டர்லூ பகுதியில் போட்டியிட்ட பர்திஷ் சாஜர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார் |