-
10 ஜன., 2024
கறுப்பு உடையுடன் சபைக்கு வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்! [Tuesday 2024-01-09 18:00]
![]() மக்கள் மீது அதீத வரிச்சுமை சுமத்தப்படுவதாக குற்றம் சுமத்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று கறுப்பு ஆடை அணிந்து சபைக்கு வந்தனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னம்பெரும, மக்களின் மீது சுமத்தப்பட்டிருக்கும் வரம்பற்ற வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தான் இவ்வாறு செய்ததாக தெரிவித்தார். |
மக்களின் சாபத்தினால் அச்சம் - எம்.பி பதவியில் இருந்து விலகினார் சமிந்த விஜேசிறி!
![]() ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, பதவி விலகுவதாக விலகுவதாக அறிவித்துள்ளார் |
நாளை இலங்கை வரும் பிரித்தானிய இளவரசி! - யாழ்ப்பாணமும் செல்கிறார்.
![]() பிரித்தானிய இளவரசி ஹேன் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 75 ஆண்டு கால நிறைவை முன்னிட்டு இடம்பெறவுள்ள நிகழ்வுகளில் பங்கேற்குமாறு இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்புக்கு அமைய, அவரது விஜயம் அமையவுள்ளது. |
நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது! - தமிழ் எம்.பிக்கள் எதிர்ப்பு.
![]() தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் தொடர்பான சட்ட மூலம் 41 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் இன்று நிறை வேற்றப்பட்டது. இந்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக 48 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன. |
வித்தியா கொலை வழக்கு - மேன்முறையீட்டு மனுக்கள் 22ஆம் திகதி விசாரணை!
![]() 2015 ஆம் ஆண்டு புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் மேன்முறையீடுகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் திகதியிட்டுள்ளது. |
8 ஜன., 2024
ல்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் முன்விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவுர்
குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 11 பேரின் விடுதலையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
அடுத்த வாரம் கொழும்பு வருகிறது சர்வதேச நாணய நிதியக் குழு:
![]() நாட்டின் சமகால பொருளாதார நிலவரம் தொடர்பில் மதிப்பீட்டை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழுவினர் அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். |
4 ஜன., 2024
ரணிலுக்கு எதிரான போராட்டத்துக்கு தடைவிதிக்க மறுத்தது நீதிமன்றம்
![]() ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கு தடை விதிக்கக் கோரி பொலிஸார் விடுத்திருந்த கோரிக்கையை யாழ். நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. |
3 ஜன., 2024
அலெக்ஸ் மரணம் ஆட்கொலை என தீர்ப்பு! - ஐந்தாவது பொலிஸ் அதிகாரியையும் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு. [Wednesday 2024-01-03 16:00]
![]() யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனின் மரணம் "மனித ஆட்கொலை" என யாழ்.நீதிவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது. |
ஜப்பானில் 2 விமானங்கள் மோதிக் கொண்டதில் ஒரு விமானம் தீக்கிரை - 385 பேரின் கதி என்ன?
2 ஜன., 2024
ஜப்பானில் 5 மணி நேரத்தில் 50 முறை நிலநடுக்கம், 16 அடி உயரம் எழுந்த சுனாமி - நடந்தது என்ன?
31 டிச., 2023
கொழும்பில் தமிழரசுக்கட்சியின் அரசியல்குழுக் கூட்டம்! [Sunday 2023-12-31 16:00]
![]() இலங்கைத் தமிழரசுக் கட்சியின் விசேட அரசியல் குழுக் கூட்டம் எதிர்வரும் பத்தாம் திகதி அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து மத்திய செயற்குழுக் கூட்டமொன்றும் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது |
பொதுஜன பெரமுனவில் பிளவுபட்ட புதிய அரசியல் கூட்டணி நாளை உதயம் : நாட்டை நேசிக்கும் தலைவரை ஜனாதிபதியாக்குவோம் - அநுர பிரியதர்ஷன யாப்பா
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது அதிருப்தியடைந்த ஆளும் கட்சி உறுப்பினர்களின் புதிய மாற்று அரசியல் கூட்டணி நாளை
29 டிச., 2023
யாழ். திரும்பிய கில்மிஷாவுக்கு அமோக வரவேற்ப
![]() ஸீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமப போட்டி நிகழ்ச்சியில், வெற்றியீட்டிய, கில்மிஷா இன்று சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய போது, பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. கில்மிஷா, தனது பெற்றோருடன் இன்று சென்னையில் இருந்து பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் திரும்பினார் |
விஜயகாந்த் மறைவுக்கு சுமந்திரன், சாணக்கியன் இரங்கல்
![]() தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மறைவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரங்கலை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார் |
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கடும் வாக்குவாதம்
![]() இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறும், விவகாரம் தொடர்பாக பேசப்பட்டபோது யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இன்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே தர்க்கம் ஏற்பட்டது. |
25 டிச., 2023
காரிருளின் ஆட்சிக்கு பாலகன் இயேசுவின் பிறப்பு நிச்சயமாக முற்றுப்புள்ளி வைக்கும்
![]() இனவாதம், மதவாதம், போர், இறப்பு, பசி, பட்டினி என நீண்டு கொண்டே செல்லும் காரிருளின் ஆட்சிக்கு பாலகன் இயேசுவின் பிறப்பு நிச்சயமாக முற்றுப்புள்ளி வைக்கும் என்பதை நம்புவோம் என யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார் |
ரிரான் அலசுக்கு கத்தோலிக்க திருச்சபை சவால்! - வலுக்கிறது மோதல்.
![]() பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் குண்டர் செயற்பாடுகளுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப் போவதில்லை. அருட்தந்தை சிறில் காமினி தொடர்புடைய விபத்து குறித்து பேராயருக்கு நெருங்கிய ஒருவர் அவருடன் தொலைபேசியில் உரையாடியதாக அவர் தெரிவித்துள்ளமை முற்றிலும் பொய்யாகும் என்று பேராயர் இல்லத்தின் மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பு பிரிவின் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் பெர்னாண்டோ தெரிவித்தார் |